வந்தவாசி அருகே கார்த்திகை தீபத்தன்று அகல் விளக்கு ஏற்றும்போது பெட்ரோல் கேன் கவிழ்ந்து தீ.. டீக்கடைக்காரர் மனைவி பரிதாபமாக பலி

வந்தவாசியை அடுத்த சளுக்கை கிராமத்தைச் சேர்ந்தவர் பாண்டியன். அதே கிராமத்தில் டீக்கடை நடத்தி வருகிறார். இவரது மனைவி ஸ்ரீமதி (வயது 45). இவர் கடந்த 3-ந் தேதியன்று தீபத் திருவிழாவிற்காக வீட்டில் அகல்விளக்கு ஏற்றியுள்ளார்.

அப்போது வீட்டில் பெட்ரோல் வாங்கி வைக்கப்பட்டிருந்த கேன் இவரது கால் பட்டு விழுந்தது. அதில் இருந்து கொட்டிய பெட்ரோலில் தீ பற்றவே ஸ்ரீமதியின் சேலையிலும் தீப்பிடித்தது. வலி தாங்கமுடியாமல் ஸ்ரீமதி கூச்சலிட்டார். அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து தீயை அணைத்து அவரை மீட்டு வந்தவாசி அரசு மருத்துவம்னையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கு டாக்டர்கள் அவருக்கு முதலுதவி சிகிச்சை அளித்து பின்னர் மேல்சிகிச்சைக்காக சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

அங்கு சிகிச்சை பலனின்றி ஸ்ரீமதி இறந்து விட்டார். இதுகுறித்து வந்தவாசி வடக்கு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.



புதியது பழையவை