விபத்தில் இறந்த வந்தவாசி இளைஞர்.. குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்கிய அஞ்சல் துறை.. ரூ.548 மட்டுமே இன்சூரன்ஸ் கட்டியிருந்தார்!!

வந்தவாசியை சேர்ந்த டெய்லர் விநாயகம் என்பவரது மகன் ஜெயசூர்யா (வயது 27), வந்தவாசி துணை அஞ்சலகத்தில் ஆண்டு பிரீமியமாக ரூ.548 செலுத்தி, விபத்து காப்பீடு எடுத்திருந்தார். 

கடந்த மாதம் நடந்த சாலை விபத்தில் ஜெயசூர்யா இறந்து விட்டார். இதனை தொடர்ந்து அவரது தாய் சீதாலட்சுமி வந்தவாசி அஞ்சலத்தை தொடர்பு கொண்டு மகனின் விபத்து காப்பீடு இழப்பு தொகை கோரினார். 

இதனை அடுத்து அஞ்சல் அதிகாரிகள் துரிதமாக செயல்பட்டு ரூ.10 லட்சம் இழப்பீடு தொகைக்கான காசோலை சீதாலட்சுமியிடம் வந்தவாசி துணை கோட்ட அஞ்சல் அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில் வழங்கப்பட்டது. 

ஒருவருக்கு மரணம் எதிர்பாராத விதமாக நிகழும்போது, அது அவரைச் சார்ந்த குடும்ப உறுப்பினர்களை எப்படி பாதிக்கும் என்பது பாதிக்கப்பட்டவர்கள் அனுபவத்தில் இருந்து அறிந்துகொள்ள முடியும். அதேசமயம் பொருளாதாரம் சார்ந்த ஆதரவுக்கு காப்பீடு போன்றவை குறைந்தபட்ச ஆறுதலை கொடுக்கும் என்பதில் சந்தேகமில்லை.

புதியது பழையவை