கிராம ஊராட்சி செயலாளர் பணிக்கான அறிவிப்பு வெளியீடு - திருவண்ணாமலை மாவட்டத்தில் 69 காலி இடங்கள்.. சம்பளம் எவ்வளவு தெரியுமா..?

தமிழ்நாடு முழுவதும் சென்னை நீங்கலாக அனைத்து மாவட்டங்களிலும் காலியாக உள்ள கிராம ஊராட்சி செயலாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. மொத்தம் 1483 இடங்கள் காலியாக உள்ளன. அதில் திருவண்ணாமலை மாவட்டத்தில் மட்டும் 69 காலி இடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விவரங்கள் www.tnrd.tn.gov.in இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. அதே இணையதளத்தில் தான் விண்ணப்பங்களையும் அனுப்ப வேண்டும். 

கல்வித் தகுதியை பொறுத்தவரை 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க முடியும். வரும் நவம்பர் 9-ந்தேதி வரை விண்ணப்பங்கள் பெறப்படும். அதற்கு பிறகு வரும் விண்ணப்பங்கள் ஏற்கப்படாது. 

வரும் நவம்பர் 10-ந்தேதி முதல் 24-ந்தேதி வரை விண்ணப்பங்கள் சரிபார்க்கப்படும். பிறகு டிசம்பர் 3-ந்தேதிக்குள் தகுதி வாய்ந்த விண்ணப்பங்கள் பட்டியலிடப்பட்டு, டிசம்பர் 4-ந்தேதி முதல் 12-ந்தேதி வரை ஒரு வாரத்திற்கு அந்தந்த மாவட்டங்களில் ஆட்சியர் தலைமையில், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர், ஊராட்சிகள் உதவி இயக்குநர், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வளர்ச்சி) ஆகியோர் கொண்ட குழுவினர் நேர்காணல் நடத்துவர்.

இதன் முடிவுகள் வரும் டிசம்பர் 16-ந்தேதிக்குள் வெளியிடப்படும். தொடர்ந்து 17-ந்தேதி பணி நியமன ஆணைகள் வழங்கப்படும் என்று திட்டமிடப்பட்டுள்ளது.



திருவண்ணாமலை மாவட்டம் (இட ஒதுக்கீடு வாரியாக)

  • மொத்த காலியிடங்கள்: 69
  • பொது: 54
  • பெண்களுக்கான இட ஒதுக்கீடு: 15
  • எஸ்டி: 1
  • எஸ்சி (அ): 2
  • எஸ்சி: 11
  • எம்.பி.சி: 14
  • பிசி: 18
  • பிசி(முஸ்லிம்): 2
  • பொது பிரிவு: 21
ஊதியம்: ரூ. 15900 - ரூ. 50400

புதியது பழையவை