பொங்கல் திருநாளை முன்னிட்டு, வரும் 09/01/2026 முதல் 14/01/2026 வரையில், சென்னையிலிருந்து சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
பொங்கல் திருநாள் முடிந்த பின்னர், பிற ஊர்களிலிருந்து சென்னைக்கு, வரும் பயணிளுக்காக 16/01/2026 முதல் 19/01/2026 வரையில், சிறப்புப் பேருந்துகளும் இயக்கப்படுகின்றன.
அதன்படி, திருவண்ணாமலை மாவட்ட மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு குறிப்பாக, வந்தவாசி, போளூர், திருவண்ணாமலை வழியாக செல்லும் பேருந்துகள், கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையம் (KCBT), கிளாம்பாக்கம் மாநகர பேருந்து நிலையத்தில் (MTC) இருந்து இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரி, கடலூர், சிதம்பரம், திருச்சி, மதுரை, தூத்துக்குடி, செங்கோட்டை, திருநெல்வேலி, சேலம், கோயம்புத்தூர், கும்பகோணம் மற்றும் தஞ்சாவூர் மார்க்கமாக செல்லும் பேருந்துகள் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திலும்,
கிழக்கு கடற்கரை (ECR), காஞ்சிபுரம், வேலூர், பெங்களூர் மற்றும் திருத்தணி மார்க்கமாக செல்லும் பேருந்துகள் கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்தும்
பொன்னேரி, ஊத்துக்கோட்டை வழியாக ஆந்திரா மாநில மார்க்கமாக செல்லும் பேருந்துகள் மற்றும் வழக்கமாக இயக்கப்படும் திருச்சி, சேலம், கும்பகோணம் மற்றும் திருவண்ணாமலை பேருந்துகள் மாதவரம் பேருந்து நிலையத்தில் இருந்து இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

