வந்தவாசியை அடுத்த ஒரு கிராமத்தில், சிவாஜி (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவரின் மனைவி ஜெயலட்சுமி (பெயர் மாற்றப்பட்டுள்ளது). சிவாஜிக்கும், உறவினர் கோகுல் என்வருக்கும் ஏற்கனவே முன்விரோதம் இருந்து வருகிறது.
நேற்று ஜெயலட்சுமி தனது வீட்டில் இருந்தபோது கோகுல் மனைவி சங்கீதா அங்கு வந்து ஜெயலட்சுமியை அசிங்கமாக பேசி திட்டி சண்டையிட்டதாகவும், ஜெயலட்சுமி குளிக்கும்போது கோகுல் எட்டிப் பார்த்ததாகவும், ஜெயலட்சுமி குளித்ததை கோகுல் வீடியோ எடுத்து சமூக வலைதளத்தில் பதிவிட்டு விடுவேன் என்று மிரட்டியதாகவும் கூறப்படுகிறது.
இதுகுறித்து கீழ்கொடுங்காலூர் போலீசில் ஜெயலட்சுமி புகார் அளித்தார். அதன் பேரில் வழக்குப் பதிவு செய்து போலீஸ் விசாரணை நடத்தி வருகிறது. புகார் தொடர்பாக கோகுல், மனைவி சங்கீதா ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

