டாஸ்மாக் கடைகளுக்கு 16-ந் தேதி (திருவள்ளுவர் தினம்) விடுமுறை

மாட்டுப்பொங்கல் தினத்தன்று, திருவள்ளுவர் தினமாகவும் கொண்டாடப்படுகிறது. மதுவுக்கு எதிராக குறள்கள் எழுதிய திருவள்ளுவரின் பிறந்த நாள் அன்று மது விற்பனை செய்யக்கூடாது என தமிழ் நாடு அரசு முடிவெடுத்துள்ளது. அதனால், தமிழ்நாடு முழுக்க மதுகடைகளை மூட உத்தரவிடப்பட்டுள்ளது. 

அதன்படி, வந்தவாசி உள்ளடக்கிய திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு டாஸ்மாக் மதுபானக் கடைகள், தனியார் மதுபான கூடங்கள் மூடப்பட வேண்டும் என்று மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை ஆணையர் தெரிவித்துள்ளார்.

அதன்படி வருகிற 16-ந் தேதி (வெள்ளிக்கிழமை) திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மதுபானக் கடைகள், முன்னாள் ராணுவ வீரர்களுக்கான அங்காடி, அரசு மற்றும் தனியார் மதுபான கூடங்கள் அனைத்தும் விடுமுறை அளிக்கப்பட்டு விற்பனை இன்றி மூடி வைக்கப்படும் என ஆட்சியர் தர்ப்பகராஜ் தெரிவித்துள்ளார்.


புதியது பழையவை