வந்தவாசி அருகே பைக்கில் சென்ற இளைஞர் முன்னாடி வைத்திருந்த காலண்டர் கீழே விழுந்தபோது பிடிக்க முயன்று உயிரைவிட்ட சோகம்

வந்தவாசி அருகே, இரு சக்கர வாகனத்தில் சென்றபோது கீழே விழுந்த காலண்டரை பிடிக்க முயன்ற இளைஞர் வாகனத்திலிருந்து தவறி விழுந்து பலியானார்.

வந்தவாசியை அடுத்த ஆலத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சத்தியமூர்த்தி (32 வயது). இவர் சென்னையில் ஒரகடத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். இவரக்கு மனைவி உள்ளார். இவர்களுக்கு ஒரு மகள் உள்ள நிலையில் கடந்த 20 நாட்களுக்கு முன்பு 2-வது பெண் குழந்தை பிறந்துள்ளது.

இந்த நிலையில் உத்திரமேரூரில் சத்திய மூர்த்தி நகையை அடகு வைத்திருந்தார். அதனை மீட்பதற்காக அவர் அங்கு சென்று நகையை மீட்டபின் அடகு கடையில் கொடுத்த காலண்டருடன் பைக்கில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார். வெங்கோடு கிராமத்தில் உள்ள சுடுகாடு அருகே வந்தபோது முன்பக்கமாக வைத்திருந்த காலண்டர் கீழே விழுந்துள்ளது.

இதனை பிடிப்பதற்காக சத்தியமூர்த்தி முயன்றபோது, பைக்கில் இருந்து நிலை தடுமாறி விழுந்த அவர் படுகாயம் அடைந்து உயிரிழந்தார்.


Youth Dies After Falling From Motorcycle Near Vandavasi

புதியது பழையவை