வந்தவாசி அடுத்த பாதிரி ஊராட்சியில் பிரதான போக்குவரத்து சாலையானது குண்டும் குழியுமாக கிட்டத்தட்ட 5 ஆண்டுகளாக பேட்ச் ஒர்க் மட்டுமே செய்து வந்துள்ளதால், அந்த சாலை ஒவ்வொரு மழைக்கும் பெரும்பள்ளமாக மாறி வாகனங்களில் செல்வோருக்கு ஆபத்தான குழியாக மாறியுள்ளது.
இந்த சாலையை மேம்படுத்தி, போக்குவரத்து ஏதுவாக மாற்றித் தர கோரி முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் திரு அரிகிருஷ்ணன் முதல்வரின் முகவரி துறையில் அளித்த புகார் மனுவுக்கு பதில் அளித்துள்ள வந்தவாசி ஊராட்சி ஒன்றிய சாலை ஆய்வாளர், வரும் நிதியாண்டில் முதலமைச்சரின் கிராம சாலைகள் மேம்பாட்டுத்திட்டத்தின் கீழ் (MGMST) நிர்வாக அனுமதி பெறப்பட்டு சாலை அமைத்து தரப்படும் என்றும், இந்த கோரிக்கையானது திட்ட முன்னுரிமை பதிவேட்டில் சேர்க்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

