தீபத்திருநாள் அன்று வந்தவாசி மலையில் ஏற அனுமதி இல்லை - அடிவாரத்தில் வழிபாடு செய்ய ஏற்பாடு

வரும் டிசம்பா் 3-ஆம் தேதி நடைபெறவுள்ள காா்த்திகை தீபத் திருவிழா அன்று, வந்தவாசி அடுத்த வெண்குன்றம் மலை மீது ஏற பொதுமக்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. 



வழக்கமாக தீப திருநாள் அன்று பொதுமக்கள் மலை மீது ஏறி, தவளகிரீஸ்வரர் கோவிலில் தரிசனம் செய்வர். அதே போல், மாலை நேரம் மகா தீபம் ஏற்றுவதையும் பொதுமக்கள் கண்டு தரிசிப்பர். இந்நிலையில், வந்தவாசி வெண்குன்றம் மலை மீது உள்ள கோவிலில் பராமரிப்பு பணிகள் நடைப்பெற்று வருகிறது. அதேபோல், படிகளையும் புதிதாக அமைக்கும் பணிகள் முழுமையடையாததால், கடந்த சில ஆண்டுகளாக பொதுமக்கள் மலை மீது ஏற அனுமதிக்கப்படுவதில்லை.  மலை அடிவாரத்தில் தவளகிரீஸ்வரர் உற்சவர் சிறப்பு அலங்கார தரிசனத்துக்கு ஏற்பாடு செய்வர். வழக்கம் போல், மலைக்கு வரும் மக்கள் தரிசனம் செய்துவிட்டு, கடைகளில் தங்களுக்கு வேண்டியதை வாங்கி செல்வர்.

இந்தாண்டும் மலை ஏற அனுமதி இல்லை என்ற மனநிலையிலேயே மக்களும் உள்ளனர். இந்நிலையில், நேற்று, வட்டாட்சியர் அலுவலகத்தில் அரசு அதிகாரிகள், அரசியல் கட்சியினர், கோவில் நிர்வாகிகள், சமூக ஆர்லர்கள் கலந்துக்கொண்ட ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், முறையே, மலை மீது மக்களுக்கு அனுமதி மறுப்பது. அடிவாரத்தில் உற்சவர் வழிபாடு தரிசனத்துக்கு ஏற்பாடு செய்வது, வந்தவாசி நகரத்துக்கும் மலை அடிவாரத்துக்கும் செல்ல பேருந்து வசதிக்கு ஏற்பாடு செய்வது, கூட்டத்தை கண்காணிக்க சிசிடிவி, குடிநீர், மருத்துவ வசதிகளுக்கும் ஏற்பாடு செய்வது என முடிவு செய்யப்பட்டது.

மலை மீது ஏற மக்களுக்கு அனுமதி இல்லாவிட்டாலும், தீபம் ஏற்றும் நிகழ்வை அடிவாரத்தில் இருந்து கண்டு வணங்கலாம்.

புதியது பழையவை