வந்தவாசி பையனுக்கு சீன பெண்ணுடன் சிங்கப்பூரில் மலர்ந்த காதல்.. சென்னாவரம் கிராமத்தில் புது வீடு கட்டி திருமணமும் செய்துக் கொண்டனர்!

சிங்கப்பூரில் பணியாற்றிய சீன பெண்ணை அதே நிறுவனத்தில் பணியாற்றும் வந்தவாசி சென்னாவரத்தைச் சேர்ந்த  என்ஜினீயர் தான் கட்டிய புதிய வீட்டில் தமிழ் முறைப்படி திருமணம் செய்து  குடியேறினார்.

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியை அடுத்த சென்னாவரம் கிராமத்தைச் சேர்ந்த வெங்கடேஷ் (வயது 38). ஏழ்மையான விவசாய குடும்பத்தில் பிறந்த இவர் ஆஸ்திரேலியாவில் என்ஜினீயரிங் படிப்பை முடித்து விட்டு கடந்த 10 ஆண்டுகளாக சிங்கப்பூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் மேலாளராக பணிபுரிந்து வருகிறார்.

அதே நிறுவனத்தில் மனிதவள மேம்பாட்டு அதிகாரியாக சீனாவை சேர்ந்த வாங் யாயா(32) என்ற பெண் பணியாற்றி வந்தார். அப்போது இருவருக்கும் இடையே காதல் மலர்ந்தது. 5 வருடங்களாக காதலித்து வந்த இவர்கள் இருவரும் சிங்கப்பூரில் மேற்கத்திய முறைப்படி திருமணம் செய்து கொண்டனர். வாங் யாயாவின் சொந்த ஊரான ஷாங்காய் சென்று சீன முறைப்படி திருமணம் செய்தனர்.

இந்த நிலையில் வாங் யாயா தனது கணவரின் கிராமமான சென்னாவரத்தில் சொந்த வீடு கட்டி தமிழ் முறைப்படி திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று விரும்பினார். இதையடுத்து மனைவியின் ஆசைப்படி சென்னாவரம் கிராமத்தில் வீடு கட்டி அவர்கள் கிரகப்பிரவேசம் நடத்தி அந்த வீட்டில் குடிபுகுந்தனர்.

தொடர்ந்து உறவினர்கள், நண்பர்கள் முன்னிலையில் அவர்கள் தமிழ் முறைப்படி எளிய முறையில் திருமணம் செய்து கொண்டனர். பின்னர் அவர்கள் பெற்றோரிடம் ஆசி பெற்றனர். பின்பு உறவினர்கள் அவர்களை வாழ்த்தி பரிசுப்பொருட்களை வழங்கினர். மேலும் ஆரத்தி எடுத்தும் வாழ்த்தினர்.



நன்றி: தினத்தந்தி


Vandavasi Man Weds Chinese Woman in Traditional Tamil Style at Chennavaram



புதியது பழையவை