வந்தவாசியில் இறந்த மூதாட்டியின் கண்கள் தானம் !

வந்தவாசியை அடுத்த சென்னாவரம் கே.எம். நகரைச் சேர்ந்த ராமலிங்கம் என்பவரின் மனைவியும், அரிமா சரவணன் அவர்களின் தாயாருமான அன்னபூரணி (76) காலமானார். இவரது கண்களை தானமாக வழங்க குடும்பத்தினர் முடிவு செய்தனர். இதையடுத்து, அன்னபூரணி அம்மையாரின் கண்களை காஞ்சிபுரம் சங்கர் கண் வங்கி மருத்துவர்கள் உதவியுடன் அரிமா சங்கத்தினர் பெற்றுக்கொண்டனர்.  இதைத் தொடர்ந்து தானமாக பெறப்பட்ட கண்கள் காஞ்சிபுரம் சங்கர் கண் வங்கிக்கு எடுத்து செல்லப்பட்டது.

உங்களின் கண்களை தானம் செய்வதன் மூலம், இருவரின் கண்களைப் பார்க்க வைக்கலாம். கண் தானம் செய்வோம்



புதியது பழையவை