வந்தவாசி ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் (கமிட்டி), இன்று வியாபாரிகள் விலை போடாததால், சுமார் 1500 நெல் மூட்டைகள் தேங்கியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்திருந்தனர். இதனால், மறு அறிவிப்பு வரும் வரை, விவசாயிகள் கமிட்டிக்கு நெல் கொண்டு வர வேண்டாம் என அதிகாரிகள் வேண்டுகோள் விடுத்தனர்.
இதனிடையே வியாபாரிகளிடம் அதிகாரிகள் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடானதால், தொடர்ந்து விவசாயிகள் தங்கள் விளைப்பொருட்களை கொண்டு வரலாம் என தெரிவித்துள்ளனர்.