வந்தவாசி உட்பட திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள பிடிஓ-க்கள் பணியிட மாற்றம் - வந்தவாசிக்கு வெங்கடேசன் நியமனம்

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள 18 ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் பணிபுரிந்த 16 வட்டார வளர்ச்சி அலுவலர்களை பணியிட மாற்றம் செய்து மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

அதன்படி,

திருவண்ணாமலை ஊராட்சி உதவி இயக்குனர் அலுவலகத்தில் நிர்வாக பிரிவில் பணிபுரிந்து வந்த ரபியுல்லா போளூர் வட்டார வளர்ச்சி அலுவலராகவும், 

போளூரில் பணிபுரிந்து வந்த வட்டார வளர்ச்சி அலுவலர் பாபு மேற்கு ஆரணிக்கு திட்ட வட்டார வளர்ச்சி அலுவலராகவும் மாற்றப்பட்டனர்.

மேற்கு ஆரணியில் பணியாற்றி வந்த தசரதராமன் அனக்காவூர் வட்டார வளர்ச்சி அலுவலராகவும் (கிராம ஊராட்சி), அங்கு பணியாற்றிய இந்திராணி ஆரணி வட்டார வளர்ச்சி அலுவலராகவும் (கிராம ஊராட்சி) மாற்றப்பட்டுள்ளனர்.

ஆரணி வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சி) ராஜேஸ்வரி, கலசபாக்கம் வட்டார வளர்ச்சி அலுவலராகவும் (கிராம ஊராட்சி), 

கலசபாக்கத்தில் பணியாற்றிய அண்ணாமலை ஆரணி வட்டார வளர்ச்சி அலுவலராகவும், 

ஆரணி வட்டார வளர்ச்சி அலுவலர் குப்புசாமி வெம்பாக்கம் வட்டார வளர்ச்சி அலுவலராகவும், வெம்பாக்கத்தில் பணியாற்றிய ஆர்.குப்புசாமி பெரணமல்லூர் வட்டார வளர்ச்சி அலுவலராகவும் (கிராம ஊராட்சி) மாற்றப்பட்டுள்ளனர்.

தெள்ளார் வட்டார வளர்ச்சி அலுவலர் மோகனசுந்தரம் சேத்துப்பட்டு வட்டார வளர்ச்சி அலுவலராகவும், சேத்துப்பட்டில் பணியாற்றிய வேலு அதே அலுவகத்தில் திட்ட பிரிவிற்கும் மாற்றப்பட்டார். 

சேத்துப்பட்டில் திட்ட பிரிவில் பணியாற்றிய வெங்கடேசன் தெள்ளார் வட்டார வளர்ச்சி அலுவலராகவும் (கிராம ஊராட்சி) தெள்ளாரில் பணியாற்றிய ராஜன்பாபு கலெக்டர் அலுவலக மேலாளராகவும்,

பெரணமல்லூர் வட்டார வளர்ச்சி அலுவலர் வெங்கடேசன் வந்தவாசி வட்டார வளர்ச்சி அலுவலராகவும் (கிராம ஊராட்சி) மாற்றப்பட்டுள்ளனர்.

வந்தவாசியில் பணியாற்றிய பரணிதரன் பெரணமல்லூர் வட்டார வளர்ச்சி அலுவலராகவும், தண்டராம்பட்டு வட்டார வளர்ச்சி அலுவலர் ரவீந்திரநாதன் அதே இடத்தில் வட்டார வளர்ச்சி அலுவலராகவும் (கிராம ஊராட்சி) மாற்றப்பட்டுள்ளனர்.



புதியது பழையவை