திருவண்ணாமலை மாவட்டத்தில் அங்கன்வாடி பணியாளர்கள், உதவியாளர் பணிக்கான காலியிடங்கள் அறிவிப்பு - விண்ணப்பிக்க 23 ஆம் தேதி கடைசி நாள்

திருவண்ணாமலை மாவட்டத்தில் அங்கன்வாடி பணியாளர்கள், உதவியாளர் பணிக்கான காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. 

இது தொடர்பாக திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் திட்டத்தின் கீழ் திருவண்ணாமலை மாவட்டத்தில் செயல்படும் குழந்தைகள் மையங்களில் காலியாக உள்ள 131 அங்கன்வாடி பணியாளர்கள், 54 குறு அங்கன்வாடி பணியாளர் மற்றும் 254 அங்கன்வாடி உதவியாளர் பணியிடங்கள் நேரடியாக நியமனம் செய்யப்பட உள்ளன.

மாவட்டம் வாரிய நேரடி நியமனம் செய்யப்பட உள்ள அங்கன்வாடி பணியாளர், குறு அங்கன்வாடி பணியாளர் மற்றும் அங்கன்வாடி உதவியாளர் பணியிடங்கள் எண்ணிக்கை மற்றும் இனசுழற்சி விவரம் மாவட்ட திட்ட அலுவலகத்திலும், அந்தந்த வட்டார குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலகங்களிலும் தகவல் பலகையில் ஒட்டப்படும். விண்ணப்பங்களை www.icds.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இப்பணியிடங்களுக்கு வருகிற 23-ந்தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.



புதியது பழையவை