வந்தவாசியில், தாய்மொழி தினத்தை முன்னிட்டு தமிழில் கையெழுத்திட்டு சாதனை முயற்சி

வந்தவாசி சுற்றியுள்ள 100க்கும் மேற்பட்ட பள்ளிகளில் , உலக தாய்மொழி தினத்தை முன்னிட்டு பள்ளி மாணவர்கள் ஒரே நேரத்தில் தமிழில் கையெழுத்து போட்டு உலக சாதனை படைக்கும் நிகழ்ச்சி நேற்று (10-02-2025) நடைபெற்றது.



வந்தவாசி சுற்றியுள்ள 183 பள்ளிகளில் உலக தாய்மொழி தினத்தை முன்னிட்டு பள்ளி மாணவர்கள் ஒரே நேரத்தில் தமிழில் கையெழுத்து போட்டு உலக சாதனை படைக்கும் நிகழ்ச்சி அரசு பள்ளி மற்றும் தனியார் பள்ளியில் நடைபெற்றது.

வந்தவாசி, செய்யாறு, மற்றும் அதனை சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களில், வந்தை முன்னேற்ற சங்கம் சார்பில் உலக தாய்மொழி தினத்தை முன்னிட்டு தாய் மொழி தமிழில் கையொப்பம் இடும் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.

தாய்மொழியை  மறந்துவிடக்கூடாது தினமும் ஒரு முறையாவது தமிழில் எழுதிட பழகிட வேண்டும் என்ற நோக்கத்தில் 100 க்கும் மேற்பட்ட பள்ளிகளை சேர்ந்த 83,622 மாணவர்கள் ஒரே நேரத்தில் தமிழில் கையெழுத்து போட்டு உலக சாதனை படைப்பதற்காக பள்ளி மாணவர்கள் வரிசையாக அமர்ந்து ஒரே நேரத்தில் தமிழில் கையெழுத்து போட்டு சாதனை படைத்தனர்.

இதற்காக பள்ளி மாணவர்களுக்கு நோட்டு மற்றும் பேனா  வழங்கி தங்கள் பெயரை தூய தமிழில் எழுதுவதின் மூலமாக தாய்மொழியை நாம் மறக்கக்கூடாது என்ற நோக்கில், குறிப்பாக ஆங்கில வழி கல்வி பயிலும் மாணவ மாணவிகள் பங்கேற்கும் விதமாக இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்திருந்ததாக, வந்தை முன்னேற்ற சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர்.  

இந்த நிகழ்ச்சியை, வந்தை முன்னேற்ற சங்க நிர்வாகிகளான வந்தை பிரேம், செல்வ விநாயகமூர்த்தி, முருகன், லோகநாதன், மலர், சாதிக், உட்பட பலர் கலந்துகொண்டு ஒருங்கிணைத்தனர்.

புதியது பழையவை