வந்தவாசியை அடுத்த இளங்காடு கிராமத்தில் ஒரு கோடியே 41 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 6 புதிய வகுப்பறை கட்டடங்கள் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு பணியை ஆரணி நாடாளுமன்ற உறுப்பினர் தரணிவேந்தன், வந்தவாசி சட்டமன்ற உறுப்பினர் அம்பேத்குமார் தொடங்கி வைத்தனர்.
வந்தவாசி அடுத்த இளங்காடு கிராமத்தில் அரசினர் உயர்நிலைப்பள்ளி இயங்கி வருகிறது இந்தப் பள்ளியில் ஆறாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரையில் சுமார் 120 க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்த நிலையில் பள்ளி கட்டிடம் முற்றிலும் சேதம் அடைந்த காரணத்தால் பள்ளி கட்டிடம் இடிக்கப்பட்டது. மேலும் பள்ளிக்கு புதிய கட்டிடம் கட்டாமல் இருந்து வருவதால் பள்ளி மாணவர்கள் மரத்தடியிலும், வராண்டாவிலும், படிக்கும் அவலம் நிலவுவதாகவும் மற்றும் ஒரு வகுப்பு மாணவர்கள் மட்டுமே இரும்பு சீட் போட்ட அறையில் பயிலுவதாலும், லேசான மழை தூரல் வந்தாலே பள்ளி மாணவர்கள் ஒதுங்க கூட இடம் இல்லாமல் பிள்ளைகளை வீட்டிற்கு அனுப்பி விடும் அவலம் நிலவிவந்த நிலையில் இதற்காக ஒரு கோடியே 41 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் ஆறு வகுப்பறை கட்டிடங்கள் கட்டுவதற்கான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது
பள்ளிபுதிய கட்டிடம் கட்டுவதற்கான பணியினை ஆரணி தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் தரணிவேந்தன் வந்தவாசி சட்டமன்ற உறுப்பினர் அம்பேத்குமார் ஆகியோர் அடிக்கல் நாட்டு விழாவில் செங்கலை எடுத்துக் கொடுத்து துவக்கி வைத்தனர். மேலும் பள்ளியில் பயிலும் மாணவிகள் பங்களிப்பு இருக்க வேண்டும் என்பதற்காக அவர்களிடம் அடிக்கல் நாட்டுகின்ற செங்கலை கொடுத்து அவர்கள் கையிலே அடிக்கல் நாட்ட செய்தது மேலும் வரவேற்பு பெற்றது.
மேலும் இந்த நிகழ்ச்சியில் இளங்காடு பாலகணபதி,சத்யராஜ், மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி மதன், நகர மன்ற உறுப்பினர் கிஷோர் குமார், வட்ட பிரதிநிதி விக்டர் ராஜா, இளங்காடு பள்ளி தலைமை ஆசிரியர் சுரேஷ், உதவி தலைமை ஆசிரியர் லோகநாதன், உடற்கல்வி ஆசிரியர் ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டனர்.