திருவண்ணாமலை வடக்கு மாவட்டம் வந்தவாசி அடுத்த மும்முனி கிராமத்தில் வந்தவாசி மேற்கு ஒன்றியம் அதிமுக சார்பில் சட்டமன்றத் தொகுதி பூத் கமிட்டி கிளைக் கழக நிர்வாகிகள் அமைத்து, ஆலோசனை நடைபெற்றது.
இந்த நிகழ்வில், திருவண்ணாமலை வடக்கு மாவட்ட கழக செயலாளர் தூசி. மோகன், முன்னாள் அமைச்சரும், கழக அமைப்பு செயலாளருமான முக்கூர் சுப்பிரமணியன் ஆகியோர் கலந்துக்கொண்டனர்.
இந்த கூட்டத்தில் 9 பேர் கொண்ட பூத் கமிட்டி கிளைக் கழக நிர்வாகிகள் அமைக்கப்பட்டது.
“வருகின்ற 2026 சட்டமன்றத் தேர்தலில் நிர்வாகிகள் கடுமையாக பாடுபட்டு கழகப் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியை தமிழக முதல்வராகுவதற்கு கடுமையாக பாடுபட வேண்டும், அனைத்து பகுதிகளிலும் திண்ணைப் பிரச்சாரங்களை மேற்கொள்ள வேண்டும், பழைய நிர்வாகிகளை புதிய நிர்வாகிகள் சென்று சந்தித்து அவர்களுடன் இணக்கமாக சென்று வாக்குகளை சேகரிக்க வேண்டும், இளைஞர் இளம் பெண் பாசறை நிர்வாகிகளை ஒன்றிணைத்து மக்களிடையே சென்று அதிமுகவின் கடந்த ஆட்சிகளின் சாதனைகளை விளக்க வேண்டும்” என்று பூத் கமிட்டி கிளை கழக நிர்வாகிகளுக்கு ஆலோசனை வழங்கினர்.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட அவைத் தலைவர் டிகேபி மணி, மாவட்ட இணை செயலாளர் விமலா மகேந்திரன், ஒன்றிய செயலாளர்கள் பச்சையப்பன், முனுசாமி, நகர செயலாளர் ஓட்டல் பாஷா, மாவட்ட அம்மா பேரவை துணை செயலாளர் கன்னியப்பன், முன்னாள் ஒன்றிய குழு தலைவர் வழுர் சக்கரபாணி, இளைஞர் மற்றும் இளம் பெண்கள் பாசறை ஒன்றிய செயலாளர் ராஜேஷ் குமார், நகர மன்ற உறுப்பினர் செந்தில், அதிமுக நகர நிர்வாகிகள் பாபு என்கின்ற பாலசுப்பிரமணியன், ராஜசேகர், ஜேசிபி ராஜி, ஜான் விஜயன், மணிவாசன், அமையப்பட்டு குணா, மற்றும் மும்முனி கிளைக் கழக நிர்வாகிகள் உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.