3 மாதங்களாக குடிநீர் வழங்கவில்லை.. காலி குடங்களுடன் மக்கள் போராட்டம்.

மூன்று மாதங்களாக குடிநீர் வழங்கவில்லை என கூறி, சோரபுத்தூர் ஊராட்சி நிர்வாகத்தை கண்டித்து, காலி குடங்களுடன் பழங்குடியின மக்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

வந்தவாசி அடுத்த  சோரபுத்தூர் கிராமத்தில் பழங்குடிஇனத்தைச் சேர்ந்த மக்கள் சுமார் 30 க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு கடந்த மூன்று மாத காலமாக குடிநீர் வழங்கப்படவில்லை என தெரிகிறது. இதனால், பலமுறை ஊராட்சி நிர்வாகத்திடமும், சோரபுத்தூர் ஊராட்சி செயலாளரிடமும் புகார் கூறியும், மனு கொடுத்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது. 

இதனால், தெள்ளார் வட்டார வளர்ச்சி அலுவலகத்துக்கு காலி குடங்களுடன் வந்து குடிநீர் வேண்டும் குடிநீர் வேண்டும் என முழக்கமிட்டு, போராட்டத்தில் ஈடுபட்டனர். 



அங்கு வந்த தெள்ளார் வட்டார வளர்ச்சி அலுவலர் சீனிவாசன் பேச்சுவார்த்தை நடத்திய போது, தண்ணீர் வழங்கினால் மட்டுமே இந்த இடத்தை விட்டு கலைந்து செல்வோம் என்று உறுதிப்பட தெரிவித்து தரையில் அமர்ந்து தொடர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதையடுத்து, உடனடியாக களத்தில் சென்று ஆய்வு செய்வதாகவும், உடனடியாக குடிநீர் வழங்குவதற்காக இன்றே ஏற்பாடு செய்வதாகவும் வட்டார வளர்ச்சி அலுவலர் கூறியதன் அடிப்படையில் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

புதியது பழையவை