வந்தவாசி மக்களே! வாட்ஸ் அப்-ல் வரும் போலி ஆப்-களை இன்ஸ்டால் செய்ய வேண்டாம் - சைபர் கிரைம் போலீசார் எச்சரிக்கை

வாட்ஸ் அப்-ல் வரும் போலி ஆப் (APK files) கோப்புகளை பதிவிறக்கம் செய்ய வேண்டாம், என்று திருவண்ணாமலை மாவட்ட சைபர் கிரைம் போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

ஏ.பி.கே. கோப்புகள் என்பது ஆண்ட்ராய்டு போனில் இன்ஸ்டால் செய்யக்கூடிய செயலி கோப்பு ஆகும். 

இணையதளம் மூலம் குற்றச் செயல்களில் ஈடுபடும் சைபர் குற்றவாளிகள் ஏ.பி.கே. கோப்புகள் மூலம் சைபர் குற்றங்கள் செய்வது அதிகரித்து வருகிறது. சைபர் குற்றவாளிகள் போலி ஏ.பி.கே. கோப்புகளை எஸ்.பி.ஐ. ஏ.பி.கே., இ-செல்லான் ஏ.பி.கே., டிராபிக் செல்லான் ஏ.பி.கே. என்ற பெயரில் அனுப்பி மக்களை ஏமாற்றுகிறார்கள். இந்த ஏ.பி.கே. கோப்புகள் அதிகாரப் பூர்வமானவை அல்ல.

மேலும் அவை வங்கி விவரங்களை திருடவும், செல்போன் எண்ணை ஹேக் செய்யவும், உங்கள் வங்கி கணக்குகளில் இருந்து பணத்தை எடுக்கவும், ஓ.டி.பி., எஸ்.எம்.எஸ். தொடர்புகள் மற்றும் யு.பி.ஐ. பயன்பாடுகளை அணுகவும் பயன்படுத்தப்படுகிறது.

எனவே வாட்ஸ் அப், எஸ்.எம்.எஸ்., டெலிகிராம் அல்லது தெரியாத இணைப்புகளில் இருந்து வரும் போலி ஏ.பி.கே. கோப்புகளை ஒரு போதும் பதிவிறக்கம் செய்ய வேண்டாம். எப்போதும் கூகுள் பிளே ஸ்டோர் அல்லது அதிகாரப்பூர்வ அரசாங்க வலைதளங்களை பயன்படுத்துங்கள்.





புதியது பழையவை