திருவண்ணாமலை மாவட்டத்தில் 2,52,162 வாக்காளர்கள் நீக்கம்; வந்தவாசி தொகுதியில் 41,809 பேர் நீக்கம்

திருவண்ணாமலை மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிரத் திருத்தம் கடந்த நவம்பர் மாதம் 4-ந் தேதி தொடங்கப்பட்டு 21,21,902 வாக்காளர்களுக்கு கணக்கீட்டு படிவம் வீடு, வீடாக சென்று வழங்கப்பட்டது. பின்னர் பூர்த்தி செய்யப்பட்ட கணக்கீட்டு படிவங்கள் திரும்ப பெறப்பட்டு அதனை வாக்குச்சாவடி நிலை அலுவலர்களின் கைபேசி செயலியில் பதிவேற்றம் செய்யப்பட்டது.

வாக்காளர்களில் இறந்த, இடம் பெயர்ந்த, இருமுறை பதிவு பெற்ற மற்றும் கண்டறிய முடியாத வாக்காளர்கள் என அனைவரையும் இந்த சிறப்பு தீவிர திருத்த பணியில் கண்டறியப்பட்டு 2,52,162 வாக்காளர்கள் வரைவு வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கம் செய்யப்பட்டு உள்ளனர்.

வாக்காளர்களிடம் இருந்து பூர்த்தி செய்யப்பட்டு பெறப்பட்ட கணக்கீட்டு படிவங்கள் அடிப்படையில் தற்போது திருவண்ணாமலை மாவட்டத்தில் 18,69,740 வாக்காளர்கள் வரைவு வாக்காளர் பட்டியலில் இடம் பெற்று உள்ளனர். 

திருவண்ணாமலை மாவட்டத்தில்  நீக்கப்பட்ட வாக்காளர்கள் - 2,52,162

வந்தவாசி (தனி) தொகுதியில் மொத்தம்  41,809 பேர் நீக்கப்பட்டுள்ளனர்
இறப்பு: 16,940 
இடம் பெயர்ந்தவர்கள்: 22,221
இருமுறை பதிவு: 1,146 

கண்டறிய முடியாத வாக்காளர்கள்: 1,502 

-----------------------------
வந்தவாசி (தனி)  தொகுதியில் உள்ள வாக்காளர்கள்:
ஆண்கள் 1,02,264 

பெண்கள் 1,04,225

மூன்றாம் பாலினத்தவர்கள் 3 

மொத்தம் 2,06,492

உங்கள் பெயர் இருக்கான்னு voters.eci.gov.in-ல் தெரிந்து கொள்ளலாம்.




புதியது பழையவை