திருவண்ணாமலை மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ளும் விதமாக பொதுமக்கள் தங்கள் சந்தேகங்களுக்கு தொடர்பு கொள்ளும் வகையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 24 மணி நேரமும் கட்டுப்பாட்டு அறை செயல்பட்டு வருகிறது.
பொதுமக்கள் வடகிழக்கு பருவமழை தொடர்பான தங்களின் சந்தேகங்களுக்கு கட்டணமில்லா தொலைபேசி எண் 1077 மற்றும் 04175-232377 ஆகிய எண்களை தொடர்பு கொள்ளலாம். மேலும் மாவட்டத்தில் உள்ள 3 வருவாய் கோட்டாட்சியர் அலுவலகங்கள் மற்றும் 12 தாலுகா அலுவலகங்களிலும் 24 மணி நேரமும் செயல்படும் வகையில் கட்டுப்பாட்டு அறை தொடங்கப்பட்டு உள்ளது.
மேலும் பொதுமக்கள் தங்கள் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் செல்போன்களில் TNSMART என்ற செயலியை பதிவிறக்கம் செய்து வைத்துக்கொள்ளலாம். இந்த செயலியில் மழை, இடி போன்ற முன்னெச்சரிக்கை அறிவிப்புகள் தங்கள் தொலைபேசிக்கு வரும்.
எனவே மழை, இடி, மின்னல் போன்ற இயற்கை இடர்பாடுகளில் இருந்து தங்களை பாதுகாத்துக் கொள்ள அனைத்து பொதுமக்களும் இந்த செல்போன் செயலியை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.