வந்தவாசி: தேசூர் பேரூராட்சிக்குட்பட்ட அருந்ததிய சமுதாய மக்களுக்கான சுடுகாட்டு பகுதிக்கு சரியான சாலை, மின்விளக்கு வசதி இல்லை என மக்கள் புகார் தெரிவித்துள்ளனர். மேலும், ஒத்தையடி பாதையில் சடலங்களை கொண்டு செல்லும் நிலை குறித்து பல முறை மனு செய்தும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும் அப்பகுதியினர் குற்றம்சாட்டுகின்றனர். மேற்படி, சுடுகாட்டு பாதையை சீரமைத்து உரிய நடவடிக்கை எடுக்கவும் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.