தமிழ்நாட்டில் மட்டுமல்லாது நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் ரயில் நிலையங்கள் பராமரிப்பின்றி இருப்பதை சுட்டிக்காட்டி நாடாளுமன்றத்தில் ஆரணி திமுக எம். பி. தரணிவேந்தன் மத்திய ரயில்வே அமைச்சகத்திடம் பின்வரும் கேள்விகளை எழுப்பியுள்ளார்.
- அடுத்த ஐந்து ஆண்டுகளில் மறுசீரமைப்புக்கு திட்டமிடப்பட்டுள்ள ரயில் நிலையங்களின் எண்ணிக்கை?
- இந்தத் திட்டத்திற்காக ரயில் நிலையங்களைத் தேர்ந்தெடுக்கப் பயன்படுத்தப்படும் அளவுகோல்கள் என்ன?
- மறுசீரமைப்பிற்காக ஒதுக்கப்பட்ட மொத்த நிதி எவ்வளவு?
- இந்த மறுசீரமைப்பு நிலையங்களில் உள்கட்டமைப்பு, பயணிகள் வசதிகள் ஆகியவற்றை மேம்படுத்த எடுத்த நடவடிக்கைகள் என்ன?
- மறுசீரமைப்பு திட்டத்தை முடிப்பதற்காக எதிர்பார்க்கப்படும் காலக்கெடு என்ன?
- மறுசீரமைப்புச் செயல்பாட்டில் பொது-தனியார் கூட்டமைப்பின் (பிபிபி) பங்கு மற்றும் குறிப்பிட்ட நிலையங்களின் மேம்பாட்டுக்காக ஏதேனும் தனியார் பங்கேற்பாளர்கள் ஈடுபட்டிருந்தால் அவர்களின் விவரங்கள் என்ன?
- வழக்கமான ரயில் சேவைகளுக்கு இடையூறு விளைவிக்காமல் நிலையங்களின் மறுசீரமைப்பை உறுதி செய்ய அரசாங்கத்தால் எடுக்கப்பட்ட/எடுக்கப்படும் நடவடிக்கைகள் யாது?
- கட்டுமானப் பணிகளின் போது பயணிகளுக்கு ஏற்படும் சிரமத்தைக் குறைக்க அரசாங்கத்தால் எடுக்கப்பட்ட/எடுக்கப்படும் நடவடிக்கைகள் என்ன?