- வந்தவாசி - தென்னாங்கூரில் உள்ள அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரியில் பயிலும் மாணவர்களின் போக்குவரத்துக்கு போதிய அரசு பஸ் இல்லாததால் படிக்கட்டுகளில் ஆபத்தான முறையில் தொங்கியபடி பயணம் செய்கின்றனர். அசம்பாவிதம் ஏற்படுவதற்கு முன்பு போக்குவரத்து அதிகாரிகள் போதிய பஸ்களை இயக்க நடவடிக்கை எடுக்க மாணவர்கள், பெற்றோர்கள் கோரிக்கை
- வந்தவாசியில், புதிதாக புனரமைக்கப்பட்டுள்ள உழவர் சந்தையில் வியாபாரம் செய்ய, சாலையோர வியாபாரம் செய்பவர்களை வலுக்கட்டாயமாக அதிகாரிகள் அனுப்பி வைத்ததால் வாக்குவாதம் ஏற்பட்டது. நகராட்சி அதிகாரிகள், வேளாண் அதிகாரிகள் உழவர் சந்தை திறக்கப்பட்டது குறித்து பொதுமக்களுக்கு சரியான முறையில் தெரிவிக்காத காரணத்தால் பொதுமக்கள் வரவில்லை என்று விவசாயிகள் குற்றம்சாட்டினர்.