டிஎன்பிஎஸ்சி குரூப்- 1 தேர்விற்கான இலவச பயிற்சி வகுப்பு திருவண்ணாமலையில், வருகிற 12-ந் தேதி முதல் நடக்கிறது என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் (TNPSC) குரூப் - 1 பணியிடங்களுக்கான முதல்நிலை தேர்வுக்கு ஏப்ரல் மாதத்தில் அறிவிப்பு வெளியிடப்பட உள்ளது. இந்த தேர்வுக்கு கல்வித் தகுதியாக பட்டப்படிப்பு படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
இத்தேர்வு வருகிற 15.6.2025 அன்று நடத்தப்பட உள்ளது. இந்த தேர்வுப் பற்றிய முழு விவரங்களை www.tnpsc.gov.in என்ற இணையதளத்தில் பார்த்து தெரிந்து கொள்ளலாம்.
இந்த தேர்விற்கான திருவண்ணாமலை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழிநெறி வழிகாட்டு மையம், தன்னார்வ பயலும் வட்டம் மூலம் வருகிற 12-ந் தேதி முதல் வார நாட்களில் திங்கள்கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரை காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை இலவச பயிற்சி வகுப்புகள் நடத்திட உத்தேசிக்கப்பட்டு உள்ளது.
இப்பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ள ஆர்வமும், விருப்பமும் உள்ளவர்கள் நேரடியாக தொடர்பு கொண்டும், 04175-233381 என்ற அலுவலக தொலைப்பேசி எண்ணில் தங்கள் பெயரை பதிவு செய்து கொண்டும் பயன்பெறலாம் என ஆட்சியர் தர்ப்பகராஜ் தெரிவித்து உள்ளார்.