தமிழ்நாடு பட்ஜெட் 2025 - திருவண்ணாமலை மாவட்ட மக்கள் பயன்பெறும் அறிவிப்புகள், திட்டங்கள்

 



திருவண்ணாமலையில் தமிழர் பண்பாட்டு அருங்காட்சியகம்

சிந்துவெளி பண்பாட்டுக் கண்டுபிடிப்பின் நூற்றாண்டு நிறைவையொட்டி, சென்வன எழும்பூர் அருங்காட்சியகத்தில் ‘சிந்துவெளி பண்பாட்டு அரங்கம்’ உருவாக்கப்படும். மேலும், தமிழ்நாட்டிற்கு வருகைப்புரியும் பிற மாநில மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு தமிழரின் தொன்மை மற்றும் தொடர்ச்சியின் சிறப்புகளை அறிமுகப்படுத்தும் விதமாக, மாமல்லபுரம் மற்றும் திருவண்ணாமலை ஆகிய இடங்களில் தமிழர் பண்பாட்டு அருங்காட்சியகங்கள் உருவாக்கப்படும். 

திருவண்ணாமலை மாவட்டத்தில் வெண்ணெய் மற்றும் பால் படர் சிப்பமிடும் நவீன இயந்திரம்
பால் மற்றும் பால் பொருட்களை உற்பத்தி செய்யும் உற்பத்தியாளர்களுக்கு பொருளாதார பாதுகாப்பையும். நுகர்வோர்க்கு ஊட்டச்சத்தினை உறுதி செய்திடும் வகையில் பால்பண்ணைகள் தொடர்ந்து நவீன மயமாக்கப்பட்டு வருகின்றன. இவ்வாண்டு சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வண்ணம் சேலம் ஆவின் பால் பண்ணையில் நவீன கழிவுநீர் சுத்திகரிப்பு ஆலை கோடி ரூபாய் மதிப்பீட்டிலும், ஈரோடு மாவட்டத்தில் இயந்திரங்களை நவீன மயமாக்கலுக்கு கோடி ரூபாய் மதிப்பீட்டிலும். சென்னை மற்றும் இதர மாவட்டங்களில் பால்பண்ணைகளில் நவீன பால் அளவிடும் கருவிகள், தவீன பால் தகவல் சேகரிப்பான் மற்றும் நிலைகாட்டி ஆகியவை 5 கோடி ரூபாய் மதிப்பீட்டிலும் நிறுவப்படும். மேலும், பால் பொருட்கள் சந்தைப்படுத்துதலை ஊக்குவிக்க 10 கோடி ரூபாய் செலவில் திருவண்ணாமலை மாவட்டத்தில் வெண்ணெய் மற்றும் பால் படர் சிப்பமிடும் நவீன இயந்திரம் அமைக்கப்படும்.

ஒரகடம்-செய்யார் தொழில் வழித்தடம்
தொழில் வளர்ச்சியை மேம்படுத்தவும், அதிக வேலைவாய்ப்பை உருவாக்கவும், பல தொழில் வழித்தடங்களை உருவாக்கிட அரசு முனைந்துள்ளது. இந்த முன்னெடுப்பின் முதற்கட்டமாக, ஒரகடம்-செய்யார் தொழில் வழித்தடம் உருவாக்கப்படும். இதனால், செய்யார் தொழிற்பூங்காவிலிருந்து உற்பத்தி செய்யப்படும் பொருட்களை வெளிநாடுகளில் சந்தைப்படுத்த வழிவகை ஏற்படும். இதற்காக, 250 கோடி ரூபாய் மதிப்பில் முதற்கட்டப் பணிகள் நடப்பாண்டில் மேற்கொள்ளப்படும்.

திருவண்ணாமலையில் உரிய கட்டமைப்பு வசதி
ஒவ்வொரு ஆண்டும் இலட்சக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் வருகை புரிந்திடும் முக்கிய நகரங்களான மாமல்லபுரம், திருவண்ணாமலை. இராமேஸ்வரம், கன்னியாகுமரி. திருச்செந்தூர், பழனி மற்றும் நாகூர் வேளாங்கண்ணி பகுதிகளில் சுற்றுலாப் பயணிகளின் தேவைகளை நிறைவுசெய்யும் வகையில் உரிய கட்டமைப்பு வசதிகளை நவீன தரத்துடன் அமைத்திடும் நோக்கோடு மொத்தம் 300 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பணிகள் மேற்கொள்ளப்படும். பல்வேறு அரசுத் துறைகள் மூலமாக மேற்கொள்ளப்படும்.

செங்கம் பகுதியில் பல்லுயிர்ப் பூங்கா
திருவண்ணாமலை நிலப்பரப்பு, அதன் மாவட்டத்தின் செங்கம் வரலாறு மற்றும் சுற்றுச்சூழல் முக்கியத்துவத்திற்குப் பெயர் பெற்றது. இலக்கியங்களிலேயே கொண்டாடப்பட்டு, நாளடைவில் வாழ்விடச் சிதைவுக்கு உள்ளான இப்பகுதியின் வனச் சுற்றுச்சூழல் அமைப்பை மீட்டெடுக்கும் வகையில், சுமார் 1000 ஹெக்டேர் பரப்பளவில், அழிந்து வரும் தமிழ் நிலப்பரப்புக்கு உரிய மர இன வகைகளின் பாதுகாப்பையும். சுற்றுச்சூழல் சுற்றுலா மற்றும் பல்லுயிர்ப் பாதுகாப்பை ஊக்குவிக்கக்கூடிய ஒரு பல்லுயிர்ப் பூங்கா. மேல்செங்கம் பகுதியில் நிறுவப்படும். இப்பூங்காவில் பசுமைப் பரப்பு மட்டுமன்றி இயற்கைச் சுற்றுலா வசதிகளும் இடம் பெறும். முதற்கட்டமாக 10 கோடி ரூபாய் நிதி இம்முயற்சிக்காக வழங்கப்படும்.



அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் புதிய பட்டயப்படிப்புகள் அறிமுகம்
தமிழ்நாட்டிலுள்ள அரசு பொறியியல் கல்லூரிகளில், வளர்ந்து வரும் தொழில்நுட்ப முன்னேற்றங்கள் மற்றும் தொழில்துறைகளின் தேவைகளை நிறைவு செய்யும் விதமாக செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence), இணையப் பாதுகாப்பு (Cyber Security), மேம்பட்ட உற்பத்தி தொழில்நுட்பம் (Advanced Manufacturing Technology), (Robotics), (Electric Vehicle Technology) (Environmental Engineering) உள்ளிட்ட வளர்ந்து வரும் துறைகளில் புதிய பட்டப்படிப்புகள் வரும் கல்வியாண்டு முதல் அறிமுகம் செய்யப்படும். இவ்வகை நவீன தொழில்நுட்பப் படிப்புகளை மாணவர்களுக்கு முறையாக அறிமுகம் செய்திட 50 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அரசு பொறியியல் (Centres of Excellence) தொழில் நிறுவனங்களுடன் இணைந்து முறையாக முன்னணி உருவாக்கப்படும்.
அதேபோன்று, அரசு பலவகைத் (Polytechnic) தொழில்நுட்பக் கல்லூரிகளில் திறன்மிகு உற்பத்தி (Smart Manufacturing Technology), Cyber Security and Networking,  (Food Technology), புதுப்பிக்கத்தக்க ஆற்றல் தொழில்நுட்பம் (Renewable Energy Technology), வான்கலம் வடிவமைப்பு (Drone Design and Application) ஆகிய துறைகளில் புதிய பட்டயப் படிப்புகள் அறிமுகப்படுத்தப்படும்.

சமூக நல்லிணக்க ஊராட்சிக்கான விருதுகள்
சாதிப் பாகுபாடற்ற சமூக நல்லிணக்கத்தையும். சமூக ஒற்றுமையினையும் கடைபிடிக்கும் ஊராட்சிகளை ஊக்குவித்து கௌரவிக்கும் வகையில், தகுதி படைத்த 10 ஊராட்சிகளுக்கு தலா 1 கோடி ரூபாய் ஊக்கத்தொகையுடன் கூடிய. சமூக நல்லிணக்க ஊராட்சிக்கான விருதுகள் வழங்கப்படும். உரிய செயல்திறன் அளவீடுகள் மற்றும் நல்லிணக்கத் தரவுகள் மூலம் இந்த ஊராட்சிகள் தேர்வு செய்யப்படும்.

அரசு வேலை
மாநிலத்தில் உள்ள தெரிவு முகமைகளான தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம். ஆசிரியர் தேர்வு வாரியம். மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் மற்றும் தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் ஆகியவற்றின் மூலம் கடந்த நான்கு ஆண்டுகளில் வெவ்வேறு அரசுத் துறைகளிலுள்ள காலிப் பணியிடங்களுக்காக இதுவரை 57,016 அரசுப் பணியாளர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இது தவிர, பல்வேறு அரசுத் துறைகள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகள் மூலமாக 21866 பேர் பணி நியமனம் செய்யப்பட்டுள்ளார்கள். ஆக மொத்தம் இந்த அரசு பொறுப்பேற்ற 4 ஆண்டுகளில் 78,882 நபர்களுக்கு பணி நியமனம் வழங்கப்பட்டுள்ளது. மேலும் 40,000 பணியிடங்களை வரும் நிதி ஆண்டிலேயே நிரப்பும் பொருட்டு உரிய நடவடிக்கைகளை அரசு துரிதமாக மேற்கொண்டு வருகிறது.

புறம்போக்கு நிலங்களில் 5 ஆண்டுகளுக்கு மேல் வசிக்கும் மக்களுக்கும் வீட்டுமனைப் பட்டா சென்னை மாநகர் மற்றும் அதன் சூழ்பகுதிகளில், ஆட்சேபனையற்ற புறம்போக்கு நிலங்களில் 10 ஆண்டுகளுக்கு மேல் வசிக்கும் தகுதியுடைய குடும்பங்களுக்கும், அதேபோன்று மாவட்டத் தலைநகரின் 16 கி.மீ. சுற்றளவிற்குள் உள்ள பகுதிகள் மற்றும் நகராட்சி மற்றும் பேரூராட்சியின் 8 கி.மீ. சுற்றளவிற்குள் உள்ள பகுதிகளில் வீட்டுமனை ஒப்படை வழங்க விதிக்கப்பட்ட தடையாணை ஒருமுறை தளர்வு செய்யப்பட்டுள்ளது. மேலும், ஆட்சேபணையற்ற புறம்போக்கு நிலங்களில் 5 ஆண்டுகளுக்கு மேல் வசிக்கும் மக்களுக்கும் வீட்டுமனைப் தடையாணை ஒருமுறை தளர்வு செய்யப்பட்டுள்ளது. மேலும், ஆட்சேபணையற்ற புறம்போக்கு நிலங்களில் 5 ஆண்டுகளுக்கு மேல் வசிக்கும் மக்களுக்கும் வீட்டுமனைப் பட்டாக்கள் வழங்கப்படும்.

பெண்கள் பெயரில் சொத்து பதிவு செய்யப்பட்டால், பதிவுக் கட்டணம் ஒரு சதவீதம் குறைக்கப்படும்

மகளிர்க்கு சம சொத்துரிமை வழங்கிடும் சட்டத்தை கடந்த 1989 ஆம் ஆண்டு நிறைவேற்றிய முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் வகுத்துத் தந்த பாதையில் வெற்றிநடை பயின்றிடும் நமது திராவிட மாடல் அரசு தமிழ்ச் சமூகத்தில் மகளிருக்கான உயர் இடத்தையும், உரிய அதிகாரத்தையும் உறுதி செய்திடும் வகையில் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அதன் தொடர்ச்சியாக, சமூகத்தில் மட்டுமன்றி, அவரவர் குடும்பங்களிலும் மகளிருக்கான சமபங்கை உறுதி செய்திடும் வகையில், வரும் 01-04-2025 முதல், 10 இலட்சம் ரூபாய் வரையிலான மதிப்புள்ள வீடு, மனை, விவசாய நிலம் உள்ளிட்ட அனைத்து அசையாச் சொத்துகள், பெண்கள் பெயரில் பதிவு செய்யப்பட்டால், அத்தகைய ஆவணங்களுக்கு பதிவுக் கட்டணம் ஒரு சதவீதம் குறைக்கப்படும். தற்போது மேற்கொள்ளப்படும் பத்திரப் பதிவுகளில் 75 சதவீத பதிவுகள் இந்த அறிவிப்பினால் பயன்பெற இயலும். இதன் மூலம், மகளிரின் சுயசார்பும் பொருளாதாரச் சுதந்திரமும் மேலும் உயர்ந்திடும் என்று இந்த அரசு நம்புகிறது.


புதியது பழையவை