ஆட்சேபனையற்ற அரசு புறம்போக்கு நிலங்களில் வசிப்பவர்களுக்கு பட்டா - திருவண்ணாமலை ஆட்சியர் தகவல்

திருவண்ணாமலை மாவட்டத்தில் ஊரகம், நகர்ப்புற பகுதிகளில் ஆட்சேபனையற்ற அரசு புறம்போக்கு நிலங்களில் வசிப்பவர்களுக்கு பட்டா வழங்கும் பணி நடைபெற்று வருவதாக ஆட்சியர் தர்ப்பகராஜ் தெரிவித்தார்.

திருவண்ணாமலை வட்டம் தேவனூர் ஊராட்சியில் மனுநீதி நாள் திட்ட முகாம் நடைபெற்றது. 

முகாமிற்கு வந்திருந்த ஆட்சியர் தர்ப்பகராஜ் பேசுகையில், ”திருவண்ணாமலை மாவட்டத்தில் ஊரகம் மற்றும் நகர்ப்புற பகுதிகளில் ஆட்சேபனையற்ற அரசு புறம்போக்கு நிலங்களில் வசிக்கும் தகுதியான பயனாளிகளுக்கு பட்டா வழங்கும் பணி நடைபெற்று வருகிறது. அந்தந்த பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் சம்பந்தப்பட்ட தாலுகா அலுவலகத்தில் ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, குடும்ப அட்டை, மின் இணைப்பு ரசீது, வீட்டு வரி ரசீது மற்றும் எரிவாயு இணைப்பு ரசீது உள்ளிட்ட ஆவணங்களுடன் பட்டா வேண்டி மனு அளித்தால் அனைத்து ஆவணங்களும் சரியாக இருக்கும் பட்சத்தில் பட்டா வழங்கப்படும். இதனை பொதுமக்கள் அனைவரும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்” என்றார்.


புதியது பழையவை