அமைச்சர் எ.வ.வேலு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தமிழகத்தில் தேசிய நெடுஞ்சாலை, மாநில நெடுஞ்சாலை மற்றும் உள்ளாட்சி துறைக்கு சொந்தமான இடங்களில் அமைக்கப்பட்டுள்ள அனைத்து அரசியல் கட்சிகள், இயக்கங்கள், சாதி, மத ரீதியிலான அனைத்து கொடி கம்பங்களையும் அகற்ற வேண்டும் என மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
எனவே, 15 நாட்களுக்குள் தி.மு.க. கொடிக்கம்பங்களை அகற்றிட தலைமை கழகம் தெரிவித்துள்ளது. அதன்படி, திருவண்ணாமலை தெற்கு, வடக்கு மாவட்டத்திற்கு உட்பட்ட மாவட்ட, ஒன்றிய, பேரூர், கிளை, வட்ட கழக நிர்வாகிகள் மற்றும் அமைப்பு சார்ந்த அணிகளின் நிர்வாகிகள் உடனடியாக தங்கள் பகுதியில் உள்ள நமது தி.மு.க. கொடிகம்பங்களை அகற்றிட வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன்.
சம்மந்தப்பட்ட ஒன்றிய, நகர, பேரூர் கழக நிர்வாகிகள் தங்கள் பகுதிகளில் அகற்றப்பட்ட கொடிகம்பங்களின் எண்ணிக்கை, அகற்றப்பட்ட இடம் ஆகிய விவரங்களை எழுத்து மூலமாக மாவட்ட கழகத்திற்கு வருகிற 31-ந்தேதிக்குள் தெரிவித்திட வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.