தமிழக வெற்றிக் கழகத்தின் திருவண்ணாமலை கிழக்கு மாவட்ட செயலாளராக அனக்காவூர் உதயகுமார் நியமனம்

தமிழக வெற்றிக் கழகத்தின் திருவண்ணாமலை மாவட்டத்தின் 4 செயலாளர்கள் பெயர்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதாவது, வடக்கு, கிழக்கு, மேற்கு, தெற்கு என நான்கு மாவட்டமாக பிரிக்கப்பட்டு, தலா 2 சட்டமன்ற தொகுதி என 4 மாவட்ட செயலாளர்கள் நிர்வாக ரீதியாக நியமிக்கப்பட்டுள்ளனர். அதன்படி, செய்யாறு, வந்தவாசி தொகுதிகள் உள்ளடக்கிய, திருவண்ணாமலை கிழக்கு மாவட்ட செயலாளராக அனக்காவூர் உதயகுமார் நியமிக்கப்பட்டுள்ளார்.


 

அதிகாரப்பூர்வமாக கட்சி தலைமை செயலாளர்கள் பெயர்களை  அறிவித்த உடன், கிழக்கு மாவட்ட கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் செய்யாறில் உள்ள தலைவர் சிலைகளுக்கு மாலை அணிவிக்க ஊர்வலமாக செல்ல ஆற்காடு சாலையில் கூடினர்.

அப்போது செய்யாறு சப்-கலெக்டர் அலுவலகம் அருகே பாதுகாப்பு பணியில் இருந்த செய்யாறு போலீசார் ஊர்வலமாக செல்ல அனுமதியில்லை என்று தெரிவித்து கட்சியினரை சாலையில் தடுத்து நிறுத்தினர். தொடர்ந்து காரில் செல்ல மட்டும் அனுமதி என்றும், தொண்டர்கள் மற்றும் பேண்டு வாத்தியங்கள், பட்டாசு வெடிக்க அனுமதி இல்லை எனத் தெரிவித்தனர்.



இதனால் கட்சியினருக்கும், போலீசாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இதனையடுத்து அவர்கள் ஆரணி கூட்ரோட்டில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.

புதியது பழையவை