தமிழக வெற்றிக் கழகத்தின் திருவண்ணாமலை (வடக்கு, தெற்கு, கிழக்கு, மேற்கு) மாவட்ட நிர்வாகிகள் - முழு பட்டியல்

நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்தின் திருவண்ணாமலை மாவட்டத்தின் 4 செயலாளர்கள் பெயர்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதாவது, வடக்கு, கிழக்கு, மேற்கு, தெற்கு என நான்கு மாவட்டமாக பிரிக்கப்பட்டு, தலா 2 சட்டமன்ற தொகுதி என 4 மாவட்ட செயலாளர்கள் நிர்வாக ரீதியாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

அதன்படி,

வந்தவாசி, செய்யாறு தொகுதிகள் உள்ளடக்கிய, திருவண்ணாமலை கிழக்கு மாவட்ட செயலாளராக  உதயகுமார் நியமிக்கப்பட்டுள்ளார்.

போளூர், ஆரணி தொகுதிகள் உள்ளடக்கிய, திருவண்ணாமலை வடக்கு மாவட்ட செயலாளராக சத்தியராஜ் நியமிக்கப்பட்டுள்ளார்.

கலசப்பாக்கம், கீழ் பென்னாத்தூர் தொகுதிகள் உள்ளடக்கிய, திருவண்ணாமலை மேற்கு மாவட்ட செயலாளராக கதிரவன் நியமிக்கப்பட்டுள்ளார்.

திருவண்ணாமலை, செங்கம் தொகுதிகள் உள்ளடக்கிய, திருவண்ணாமலை தெற்கு மாவட்ட செயலாளராக பாரதிதாசன் நியமிக்கப்பட்டுள்ளார்.



புதியது பழையவை