வந்தவாசியில் இந்திய குடியரசு கட்சி மாநில தலைவர் செ.கு. தமிழரசன் மத்திய பட்ஜெட்டில் தாழ்த்தப்பட்ட நலிந்த மக்களுக்கு மிகப்பெரிய ஏமாற்றம் என தெரிவித்துள்ளார்.
இந்திய குடியரசு கட்சியின் மாநில தலைவர் செ.கு. தமிழரசன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் சமீபத்தில் மத்திய அரசு பட்ஜெட் தாக்கல் செய்ததில் தாழ்த்தப்பட்ட நலிந்த மக்கள் மிகப்பெரிய ஏமாற்றம் அளித்த பட்ஜெட் ஆகவே நான் பார்க்கிறேன் என்றும், தேசிய அளவிலும் மாநில அளவிலும் தாழ்த்தப்பட்ட மற்றும் மலைவாழ் மக்களை நிதிநிலை அறிக்கையில் புறக்கணிக்கப்பட்டுள்ளதாகவும். ஸ்பெஷல் காம்ப்நென்ட் பிளான்- சிறப்பு உட்கூறு திட்டம் இந்திரா காந்தி ஆட்சி காலத்தில் இருந்து செயல்பட்டு வருகிறது தற்போதைய மோடி ஆட்சியில் இத்திட்டம் செயல்பாட்டில் உள்ளதா என்பது மிகப் பெரிய கேள்வி குறியாக உள்ளது என தெரிவித்தார்.
தமிழகத்தில் பள்ளி மாணவிகளுக்கு தொடர்ந்து பாலியல் வன்கொடுமை நடைபெற்று வருவது கண்டிக்கத்தக்கது எனவும், அரசு அதன் மீது சிறப்பு கவனம் செலுத்தி உரிய நடவடிக்கை எடுத்து தீர்வு காண வேண்டிய பொறுப்பு உள்ளதா என தெரிவித்தார். பீகார் மற்றும் கர்நாடக மாநிலங்களில் சாதி வாரி கணக்கெடுப்பு நடைபெற்று வருவதை நடிகர் விஜய் தமிழகத்தில் சாதி வாரி கணக்கெடுப்பு நடைபெறாததால் சமூக நீதி எங்கே என்று கேட்கிறார் வளர்ந்து வரும் அரசியல் வாதியாக விஜய் வந்து கொண்டிருக்கிறார்.
1932 ஆம் ஆண்டுகளிலே ஒட்டுமொத்தமாக சாதி வாரி கணக்கெடுப்பை இந்திய அரசு நடத்தியது அது முதல் இதுவரை இந்திய அளவிலே ஒவ்வொரு வீட்டு கதவையும் தட்டி நீங்கள் என்ன சாதி என்று கேட்டு சாதி வாரி கணக்கெடுப்பு நடத்தப்படவில்லை.
சாதி வாரி கணக்கெடுப்பு வேண்டும் என்பதே எங்களுடைய கோரிக்கை; இந்திய அளவிலே தலித் சமூகத்தில் மட்டும் 1200 உட்பிரிவுகளும் ஒட்டுமொத்தமாக இந்திய அளவிலே அத்துணை ஜாதிக்கும் நாலாயிரத்துக்கும் மேற்பட்ட சாதிய உட்பிரிவு அமைப்புகளும் உள்ளன இவைகள் எல்லாம் எவ்வாறு சாதி வாரியாக பிரித்து கணக்கெடுப்பு நடத்தி வெளியிட முடியும் என்பதும் ஒரு கேள்வியாகவே உள்ளதாகவும், வரும் சட்டமன்றத் தேர்தலில் தலித் அமைப்புகள் ஒன்றிணைந்து அரசியலை எதிர்கொள்ளும் நிலையானது கருத்து ஒற்றுமையின் அடிப்படையிலே நிகழலாமே தவிர அரசியல் ரீதியாக நடப்பது என்பது மிகப்பெரிய கேள்விக்குறி என தெரிவித்தார்.
மேலும், இந்த நிகழ்ச்சியில் முன்னாள் மாநில அமைப்பு செயலாளர் வந்தே மோகன் முன்னாள் மாநில பொதுச் செயலாளர் மங்கா பிள்ளை, மாநிலத் துணைத் தலைவர் ரமேஷ் குமார்
மாவட்ட தலைவர் ரவிச்சந்திரன் மாவட்ட செயலாளர் பாஸ்கரன் மாவட்ட பொருளாளர் ரமேஷ் பாபு நகர தலைவர் ஜெயராஜ் நகர செயலாளர் ஹரி ஒன்றிய துணைத் தலைவர் குப்பன் அனக்காவூர் ஒன்றிய தலைவர் கமல் ராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.