வந்தவாசி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் இன்று அதிகாலை முதல் கடுமையான பனி பொழிந்ததால் வாகன ஓட்டிகள் முகப்பு விளக்கை எரிய விட்டு சிரமத்துடன் வாகனத்தை ஓட்டிச் சென்றனர்.
மேலும் கடுமையான மூடு பனி காரணமாக, பொதுமக்கள் வெளியே வர தயங்கினர். காலை சுமார் 8 மணி வரை மூடு பனி இருந்ததால், இயல்பு வாழ்க்கை பாதிப்படைந்தது. அதன் பின் வெயில் காய ஆரம்பித்ததும், இயல்பு நிலை திரும்பியது.
அதேசமயம், வந்தவாசி சுற்றியுள்ள பகுதிகள் கடுமையான பனிப்பொழிவு காரணமாக ஊட்டி, கொடைக்கானல், போன்று காட்சி அளித்தது.