பெரணமல்லூரில் அதிமுக சார்பில் பூத் கமிட்டி கிளை நிர்வாகிகள் நியமிக்கப்பட்டு, வருகிற 2026 சட்டமன்ற தேர்தல் குறித்த ஆலோசனை

திருவண்ணாமலை மாவட்டம், பெரணமல்லூர் அதிமுக சார்பில் சட்டமன்றத் பூத் கமிட்டி கிளைக் கழக நிர்வாகிகள் அமைப்பது குறித்த நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. 


திருவண்ணாமலை வடக்கு மாவட்ட கழக செயலாளர் தூசி மோகன் தலைமையிலும் முன்னாள் அமைச்சரும் கழக அமைப்பு செயலாளருமான முக்கூர் சுப்பிரமணியன் முன்னிலையிலும் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், பெரணமல்லூர் பகுதியில் உள்ள 12 வார்டுகளில் 9 பேர் கொண்ட பூத் கமிட்டி கிளைக் கழக நிர்வாகிகள் நியமிக்கப்பட்டது. வருகிற 2026 சட்டமன்றத் தேர்தலில் கடுமையாக பாடுபட்டு எடப்பாடி பழனிசாமியை தமிழக முதல்வராக்குவதற்கு கடுமையாக பாடுபட வேண்டும் என்று பூத் கமிட்டி கிளை கழக நிர்வாகிகளுக்கு ஆலோசனை வழங்கினர்.

இந்த நிகழ்ச்சியில், பெரணமல்லூர் நகர துணை செயலாளர் ஜவஹர் (எ) அறிவழகன், நகர செயலாளர் மூர்த்தி, எம்ஜிஆர் மன்ற துணை செயலாளர் ஜாகிர் உசேன், உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

புதியது பழையவை