ஈரோடு மாவட்டம் சென்னிமலை அருகே கோவிலில் நடந்த திருமண நிகழ்ச்சியில், மணமகளுக்கு 18 வயது ஆனபோதிலும், மணமகனுக்கு 21 வயது பூர்த்தியாகாததால் தாலி கட்டும் நேரத்தில் வந்து போலீசார் தடுத்து நிறுத்தினர்.
தடுத்து நிறுத்தப்பட்ட இந்த திருமணத்தில் கலந்து கொள்ள மணமக்களின் உறவினர்கள் சுமார் 200 பேருக்கு சென்னிமலையில் உள்ள ஒரு தனியார் அரங்கத்தில் உணவு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அங்கு அனைவரும் காலை உணவை முடித்து கொண்டு சொந்த ஊருக்கு திரும்பினார்கள்.