திருவண்ணாமலை ஆட்சியராக தர்பகராஜ் ஐஏஎஸ் நியமனம்

திருவண்ணாமலை ஆட்சியராக தர்பகராஜ் ஐஏஎஸ் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் இதற்கு முன் திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியராக இருந்தார். 



ஏற்கெனவே திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியராக இருந்த ஆட்சியர் பாஸ்கரபாண்டியன் தமிழ்நாடு சாலை மேம்பாட்டு நிறுவனத்தின் மேலாண் இயக்குநர் மற்றும் காஞ்சிபுரம்-வந்தவாசி சாலை உள்ளிட்ட நெடுஞ்சாலை திட்டங்கள் அடங்கிய தமிழ்நாடு சாலை மேம்பாட்டுத் திட்டம்-II ன் திட்ட இயக்குநராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

இதேப்போல், தமிழ்நாட்டில் மற்ற மாவட்டங்களிலும் ஆட்சியர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அதன் படி,

விழுப்புரம் மாவட்ட ஆட்சியராக ஷேக் அப்துல்  ரகுமான், 

திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியராக மோகனச்சந்திரன்,

திருவள்ளூர் மாவட்ட ஆட்சியராக பிரதாப்,

நெல்லை மாவட்ட ஆட்சியராக சுகுமார்,

திருவாரூர் மாவட்ட ஆட்சியராக சிவசெளந்தரவள்ளி,

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியராக சரவணன்,

கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியராக தினேஷ் குமார்  ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்

புதியது பழையவை