வந்தவாசி அருகே சு.காட்டேரி கிராமத்தை சேர்ந்தவர் ஆறுமுகம் (வயது 70), விவசாயி. இவருக்கு ராணி என்ற மனைவியும், 2 மகன்களும் உள்ளனர். கடந்த 1-ந் தேதி ஆறுமுகம் வீட்டில் தூங்கி கொண்டிருந்தபோது அவரை கண்ணாடி விரியன் பாம்பு கடித்தது. உடனடியாக அவரை சிகிச்சைக்காக அருகில் உள்ள வெளிமேடுபேட்டை ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்து சென்றனர். அங்கு முதலுதவி அளிக்கப்பட்டு விழுப்புரம் முண்டயம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று இரவு ஆறுமுகம் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து அவருடைய மகன் விநாயகம் தெள்ளார் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் தமிழ்ச்செல்வி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
