வந்தவாசி அருகே அரசு கட்டடத்தில் பேட்டரிகள் திருட்டு

வந்தவாசி அருகே புலிவாய் கிராமத்தில் கிராம சேவை மையம் உள்ளது. இந்த கட்டிடத்தில் இருந்த 2 யு.பி.எஸ். பேட்டரிகளை மர்ம நபர்கள் நேற்று முன்தினம் திருடி சென்று உள்ளனர். இதுகுறித்து புலிவாய் கிராமத்தின் ஊராட்சி செயலாளர் நாகராஜன் வந்தவாசி வடக்கு போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் தமிழ்வேலன் வழக்குப்பதிவு செய்து பேட்டரிகளை திருடிச் சென்ற மர்ம நபர்களை தேடி வருகிறார்.





புதியது பழையவை

About Me

WhatsApp Button