வந்தவாசி அருகே பழுதான அரசு தொகுப்பு வீட்டை சீரமைத்தபோது இடிந்து விழுந்ததில் பள்ளி மாணவர்களான அண்ணன்-தம்பி பலியாகினர். மேலும் ஒரு மாணவர் படுகாயம் அடைந்தார்.
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியை அடுத்த வழூர் கிராமத்தை ேசர்ந்தவர் மோகன் (வயது 50). விவசாய கூலித்தொழிலாளி. அதேபகுதியில் உள்ள இளங்காடு கிராமத்தை சேர்ந்த முனியன் மகள் பவானியை மோகன் திருமணம் செய்துள்ளார்.
இவர்களுக்கு அபினேஷ் (17), முகேஷ் (14) என்ற 2 மகன்கள். இதில் மூத்த மகன் அபினேஷ், வந்தவாசி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் 11-ம் வகுப்பும், முகேஷ் அதே பள்ளியில் 8-ம் வகுப்பும் படித்து வந்தனர்.
அபினேசும், முகேசும் அவ்வப்போது இளங்காடு கிராமத்தில் வசிக்கும் தாத்தா முனியன் வீட்டிற்கு சென்று வருவார்கள். தற்போது முனியனின் அரசு தொகுப்பு வீடு மிகவும் பழுதடைந்த நிலையில் காணப்படுகிறது. அந்த வீட்டை முனியன் சீரமைத்து வருகிறார்.
நேற்று காலை அபினேஷ், முகேஷ் ஆகிய இருவரும் தாத்தா வீட்டிற்கு சென்றிருந்தனர். அங்கு வீட்டை இடிக்கும் பணி நடந்து கொண்டிருந்தது. இவர்களுடன் முனியனின் மற்றொரு பேரனான சீதாராமனின் மகன் ஸ்ரீராமும் (8) வீட்டின் உள்ளே இருந்துள்ளனர். அப்போது வீட்டின் ஒரு பகுதி சுவரை இடித்தபோது அந்த சுவர் இவர்கள் தலையில் விழுந்ததில் இடிபாடுகளுக்குள் சிக்கி அவர்கள் அலறினர். இந்த சத்தத்தை கேட்டதும் அங்கிருந்தவர்கள் ஓடிவந்து பார்த்தபோது அண்ணன்-தம்பியான அபினேஷ், முகேஷ் இருவரும் தலையில் பலத்த காயம் அடைந்து இறந்து கிடந்ததை கண்டு கதறி அழுதனர். பலத்த காயம் அடைந்த ஸ்ரீராமை அவர்கள் மீட்டு வந்தவாசி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த சம்பவம் பற்றி தகவலறிந்த பொன்னூர் போலீசார் விைரந்து வந்து அபினேஷ், முகேஷ் உடல்களை கைப்பற்றி பிேரத பரிசோதனைக்காக வந்தவாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
அரசு தொகுப்பு வீட்டை சீரமைக்கும் போது கட்டிடம் இடிந்து விழுந்ததில் 2 பள்ளி மாணவர்கள் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
செய்தி: தினத்தந்தி
Vandavasi Tragedy: Two School Students Die After Government House Wall Collapses
