முதலமைச்சரின் உழவர் நல சேவை மையம் அமைக்க வேளாண்மை, தோட்டக்கலை பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம் என்று தோட்டக்கலைத்துறை தெரிவித்துள்ளது.
இந்த மையங்களில் வேளாண்மை, தோட்டக்கலை, வேளாண்மை பொறியியல், வேளாண்மை விற்பனை தொடர்பான ஆலோசனைகள், வேளாண் இடுபொருட்கள் விற்பனை, வேளாண் எந்திர வாடகை மையம், விதைகள் பூச்சிக் கொல்லி மருந்துகள், உரங்கள், மண் மற்றும் நீர் ஆய்வு செய்ய உதவுதல் போன்ற சேவைகள் ஒரே இடத்தில் வழங்கப்படும். அக்ரிஸ்நெட் இணையதளத்தில் ஆவணங்கள் பதிவேற்றம் செய்து விண்ணப்பிக்க வேண்டும். மேலும் விரிவான திட்ட அறிக்கையுடன் உரிய வங்கியில் கடன் பெற விண்ணப்பிக்க வேண்டும்.
உழவர் நல சேவை மையங்கள் ரூ.10 லட்சம் முதல் ரூ.20 லட்சம் வரை மதிப்பீட்டில் தொடங்குபவர்களுக்கு 30 சதவீதம் மானியம் அதாவது ரூ.3 லட்சம் முதல் ரூ.6 லட்சம் வரை வங்கிகளுக்கு அரசால் மானியம் விடுவிக்கப்படும். திருவண்ணாமலை வட்டாரத்தில் உழவர் நல சேவை மையம் அமைக்க விருப்பம் உள்ள வேளாண்மை, தோட்டக்கலை பட்டப்படிப்பு முடித்த பட்டதாரிகள் அரசு கலைக்கல்லூரி எதிரில் அமைந்துள்ள கலைஞர் நூற்றாண்டு தோட்டக்கலை பூங்காவில் உள்ள திருவண்ணாமலை வட்டார தோட்டக்கலை உதவி இயக்குனர் அலுவலகத்தினை தொடர்பு கொண்டு பயன்பெறலாம்.
விண்ணப்பிக்க: https://www.tnagrisnet.tn.gov.in/KaviaDP/register

