சத்துமாவு சாப்பிட்ட ஒரு வயது குழந்தை மூச்சுத் திணறி சாவு

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அருகே சத்து மாவு சாப்பிட்ட ஒரு வயது குழந்தை மூச்சுத்திணறி இறந்தது.

செய்யாறு அடுத்த ஏனாதவாடி கிராமத்தை சேர்ந்த செந்தில்குமார் - மீனா தம்பதியினருக்கு 3 குழந்தைகள் உள்ளனர். இவர்களின் இளைய மகள் சுமித்ரா (ஒன்றரை வயது) கடந்த 11-ந்தேதி வீட்டில் இருந்த போது சத்துமாவு சாப்பிட்டதாக கூறப்படுகிறது. அப்போது குழந்தைக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டதால், உடனடியாக அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். 

பின்னர் மேல் சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

இந்தநிலையில் கடந்த 13 ஆம் தேதி, சிகிச்சை பலனின்றி குழந்தை சுமித்ரா பரிதாபமாக உயிரிழந்தது. இது தொடர்பாக போலீஸ் விசாரித்து வருகிறது.

புதியது பழையவை