10-வது படிக்கும் சிறுவனுடன், காலேஜ் படிக்கும் மாணவி காதல் திருமணம்.. வந்தவாசியில் சம்பவம்

10-வது படிக்கும் சிறுவனை, காலேஜ் படிக்கும் மாணவி ஒருவர் காதலித்து திருமணம் செய்துக்கொண்டு, இப்போது கர்ப்பமாக உள்ளார். இந்த சம்பவம் வந்தவாசியில் நடந்தேறியுள்ளது. இந்நிலையில், அந்த மாணவி மீது போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்து காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.

வந்தவாசியில் இப்படியா..? என்று கேட்கும் உங்கள் மைண்ட் வாய்ஸ் கேட்கிறது. அட ஆமாங்க. வந்தவாசி பகுதியை சேர்ந்த 16 வயது சிறுவன் அரசு மேல்நிலைப் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வருகிறார். அதே பகுதியில் உள்ள மற்றொரு கிராமத்தைச் சேர்ந்த 19 வயது இளம்பெண் கல்லூரி ஒன்றில் 2-ம் ஆண்டு படித்து வருகிறார். இருவரின் பெயர் மற்றும் இருப்பிட அடையாளங்களை குறிப்பிடாமல் தவிர்த்துள்ளோம்.

இருவரும் சில காலமாக மிகவும் நெருங்கி பழகி வந்ததாக கூறப்படுகிறது. இந்த பழக்கம் காதலாக மாறி இருவரும் அடிக்கடி தனிமையில் உல்லாசமாக இருந்ததாக தெரிகிறது. இதையடுத்து இருவரும் கடந்த மாதம் வீட்டுக்கு தெரியாமல் திருமணம் செய்துள்ளனர். தற்போது மாணவி 3 மாத கர்ப்பமாக உள்ளார். இது குறித்து பெண்ணின் பெற்றோர் புகார் தெரிவித்தனர். அதன்பேரில் வந்தவாசி வட்டார சமூக நலத்துறை விரிவாக்க அலுவலர் விசாரணை நடத்தினார். இது குறித்து வந்தவாசி மகளிர் போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. அதன் பேரில் கல்லூரி மாணவி மீது போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் மாணவனின் பெற்றோர் மீதும் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

பாலியல் குற்றங்களில் இருந்து 18 வயதுக்குட்பட்ட குழந்தைகளை பாதுகாக்க வகை செய்யும் சட்டம் தான் போக்சோ சட்டம். இந்த சட்டத்தின் மூலம், குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனைகள் விதிக்கப்படும்



புதியது பழையவை