பழங்குடி கைவினைஞர்களை மேம்படுத்துவதற்கான திட்டங்கள் என்ன? ஆரணி திமுக எம்.பி. தரணிவேந்தன் கேள்வி

ஆரணி மக்களவைத் தொகுதியில் பழங்குடி கைவினைஞர்களை ஊக்குவிப்பதற்காக அரசாங்கத்தால் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்து திமுக மக்களவை உறுப்பினர் தரணிவேந்தன் நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பியுள்ளார். 

தமிழ்நாடு மற்றும் பிற தென் மாநிலங்களைச் சேர்ந்த பழங்குடி கைவினைஞர்களுக்கு திறன் மேம்பாடு, சந்தைப்படுத்தல் மற்றும் நிதி உதவி ஆகியவற்றில் ஆதரவளிக்க அரசாங்கம் எடுத்துள்ள குறிப்பிட்ட நடவடிக்கைகள் என்ன? கடந்த மூன்று ஆண்டுகளில் இத்தகைய திட்டங்களால் பயனடைந்த பழங்குடி கைவினைஞர்களின் மொத்த எண்ணிக்கை என்ன? பழங்குடி கைவினைஞர்களின் விற்பனை மற்றும் மேம்பாட்டை எளிதாக்குவதற்காக இந்திய பழங்குடி கூட்டுறவு சந்தைப்படுத்தல் மேம்பாட்டு கூட்டமைப்பு (TRIFED) தமிழ்நாட்டில் தனது தளத்தை விரிவுபடுத்தியுள்ளதா, பழங்குடி கைவினைஞர்களுக்கான ஆன்லைன் மற்றும் உலகளாவிய சந்தை அணுகலை மேம்படுத்தவும், அவர்களின் தயாரிப்புகளுக்கு நியாயமான விலைகளை உறுதி செய்யவும் எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் என்ன? என்றும் அவர் கேட்டுள்ளார்.

புதியது பழையவை