ஜூலை 9 ஸ்டிரைக் - வந்தவாசியில் பேருந்துகள் ஓடுமா..?

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தொழிற்சங்கங்கள் சார்பில் ஜூலை 09 (புதன்கிழமை) அன்று நாடு தழுவிய பொது வேலைநிறுத்தம் நடைபெற உள்ளது. 

தமிழ்நாட்டைப் பொறுத்தவரை ஆளுங்கட்சியான தி.மு.க.வின் தொழிற்சங்கமான தொ.மு.ச. மற்றும், கூட்டணி கட்சிகள் இந்த வேலை நிறுத்த போராட்டத்தில் பங்கேற்பதால் வந்தவாசி உள்பட தமிழகம் முழுவதும் பெரும்பாலான பேருந்துகள் நாளை இயக்கப்படாது என தெரிகிறது. 

அ.தி.மு.க.வின் அண்ணா தொழிற்சங்கம் இந்த வேலை நிறுத்த போராட்டத்தில் பங்கேற்காததால், அந்த தொழிற்சங்கத்தை சேர்ந்த தொழிலாளர்கள் வழக்கம் போல் பணிக்கு வருவார்கள். 

எனவே குறைந்த எண்ணிக்கையில் பேருந்துகள் இயக்கப்படலாம் என்று தெரிகிறது. 

வணிகர் சங்கங்கள் இந்த போராட்டத்துக்கு இதுவரையில் ஆதரவு தெரிவிக்கவில்லை. எனவே கடைகள், வணிக நிறுவனங்கள் வழக்கம் போல் செயல்படும்.

இதற்கிடையே இந்த நாடு தழுவிய வேலை நிறுத்தத்தில் பங்கேற்க உள்ளதாக வங்கித்துறை அறிவித்து உள்ளது. இதைப்போல காப்பீடு துறையும் போராட்டத்தில் இணைவதாக அறிவித்து உள்ளன.



புதியது பழையவை