வந்தவாசி துர்நாற்றத்துடன் வரவேற்கிறது.. ஆட்சியர் உத்தரவை செயல்படுத்தாத நகராட்சி அதிகாரிகள்?

வந்தவாசி நுழைவு பகுதியான, பாதிரி கிராமத்திற்கு உட்பட்ட ஏரிக்கரையில் பொதுமக்கள் பெரிதும் பயன்படுத்தும் மாநில நெடுஞ்சாலை ஓரம் இறைச்சி கழிவுகளை கொட்டி அசுத்தம் செய்துள்ளனர். நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தும், பலமுறை முறையிட்டும்..  மிக தைரியமாக மீண்டும் மீண்டும் கழிவுகளை கொட்டி, சூழலை கெடுப்பதோடு, நோய் பரவும் அபாயத்தை உண்டாக்கும் சமூக விரோத செயலை நகராட்சி நிர்வாகம் கண்டுகொள்ளாதது ஏன்? என பாதிரி கிராம மக்கள் கேள்வி எழுப்புள்ளனர். 

முன்னதாக, பாதிரி கிராம வேளாண் பாசன ஏரியின் கரையில் இறைச்சி கழிவுகளை கொட்டும் வந்தவாசி பகுதி இறைச்சிக் கடைக்காரர்களின் கடைகளை சீல் வைத்து நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டும், அதிகாரிகளின் அலட்சியத்தால், இன்றுவரை கழிவுகள் கொட்டுவது தொடர் கதையாகியுள்ளதாகவும், பாதிரி கிராம ஊராட்சி சார்பில் எச்சரிக்கை பலகை வைத்தும், அதிகாரிகளுக்கு மனுக்கள் கொடுத்தும் எந்த பயனும் இல்லை எனவும் மக்கள் புலம்புகின்றனர். 




புதியது பழையவை

About Me

WhatsApp Button