குழந்தை பாக்கியம் தரும் கோதை அம்மன் !

செல்வங்களில் எல்லாம் மிகச் சிறந்த செல்வமாக கருதப்படுவது குழந்தை செல்வம்தான் எனலாம். குழந்தை பாக்கியம் வேண்டி எத்தனையோ பேர் இறைவனை வேண்டிகொண்டிருக்கிறார்கள். பணம் செலவு செய்து மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருபவர்கள் ஒரு பக்கம் என்றால், மருத்துவத்திற்காக செலவு செய்வதற்கு எங்களிடம் பணம் இல்லையென தவிப்பவர்கள் இன்னொரு பக்கம்.  இப்படி ஒரு குழந்தை கூட இல்லாமல் கஷ்டப்படும் தம்பதியர்கள் எத்தனையோ பேர் இருக்கிறார்கள். 

இறைசக்தியை நம்புபவர்களுக்கு அந்த அருள் நிச்சயம் இருக்கும். குழந்தை பாக்கியம் ஒரே ஒரு முறை பாதிரி கோதையம்மனை வழிபட்டு வாருங்கள். ஒரு முறை அம்மனை பார்த்துவிட்டு வேண்டுதலை வைத்துவிட்டு வந்தால் போதும். உங்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். அம்மன் அருள் நிச்சயம் உங்களுக்கு ஒரு வழியை தரும்.


கோதையம்மன் கோவிலுக்கு செவ்வாய்க்கிழமை, வெள்ளிக்கிழமை அல்லது ஞாயிற்றுக்கிழமை சென்று வாருங்கள். தம்பதியாக சென்று இருவரும் அம்மனை தரிசனம் செய்ய வேண்டும். அம்மா நீயே எனக்கு குழந்தையாக வந்து பிறக்க வேண்டும் என்று கணவன், மனைவி இரண்டு பேரும் மனம் உருகி வேண்டி உரிமையோடு கேளுங்கள். அப்படியே, அன்னதானம் செய்துவிட்டு வாருங்கள். 5 பேருக்கோ, 10 பேருக்கோ, 50 பேருக்கோ, எண்ணிக்கை முக்கியமில்லை. பசியாற்றிட அன்னதானம் வழங்கிவிட்டு அவர்களின் வாழ்த்தையும் பெற்றுக் கொள்வது கோடி புண்ணியம். 

அம்மன் வழிபாட்டோடு, முடிந்தால், உங்கள் திருமண நாளிலோ, பிறந்த நாளிலோ ஆசிரமங்களுக்கு சென்று ஆதரவற்ற ஏழை எளிய குழந்தைகளுக்கு உங்களால் முடிந்த ஏதேனும் உதவியும் செய்யுங்கள்.

கோவில் அமைப்பு: பாதிரி கிராமத்தின் பிரதான பகுதியில் அமைந்துள்ள அம்மன் கோவிலானது சிறிய அளவில் இருந்தாலும், வேண்டியோரை கைவிடாது சக்தி வாய்ந்த திருத்தலமாக உள்ளது.

கோவில் வெப்சைட்: https://pathiri.vandavasinews.in/p/kothaiamman.html

கோவிலுக்கு எப்படி செல்வது? திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அடுத்த பாதிரி கிராமத்தில், கிராம தேவதையாக கோதை அம்மன் குடி கொண்டிருக்கிறாள். தமிழ்நாட்டில் எங்கிருந்து வந்தாலும், வந்தவாசி நகரத்தின் எல்லைக்குட்பட்டு உள்ளதால், எந்த தடங்கலும் இன்றி, கூகுள் மேப் வழியோடு வந்தால் தரிசித்து செல்லலாம்.

கூகுள் மேப் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

புதியது பழையவை