வந்தவாசி - பாதிரி கிராம ஏரியில் இறைச்சி கழிவு கொட்டுபவர்கள் மீது நடவடிக்கை: எம்.எல்.ஏ. அம்பேத்குமார் எச்சரிக்கை

வந்தவாசி நகரில் உள்ள இறைச்சி விற்பனை செய்பவர்களில் சிலர் இறைச்சி கழிவுகளை பாதிரி ஏரிக்கரையில் கொட்டி வருகின்றனர். இதனால் ஏரி நீர் அசுத்தமாவதாகவும், அந்த பகுதி முழுவதும் சுகாதார சீர்கேடு நிலவுவதாகவும் பொதுமக்கள் தொடர்ந்து புகார் தெரிவித்து வந்தனர்.

இதையடுத்து எம்.எல்.ஏ.  அம்பேத்குமார் அந்த ஏரியில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது ஏரியில் உள்ள இறைச்சி கழிவுகளை அகற்றும்படி நகராட்சி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். 

மேலும், இறைச்சி கழிவு கொட்டுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

ஆய்வின் போது வந்தவாசி தாசில்தார், சுகாதார ஆய்வாளர், வந்தவாசி நகரமன்ற தலைவர் ஜலால், நகராட்சி அதிகாரிகள் உள்ளிட்டோர் இருந்தனர்.



புதியது பழையவை

About Me

WhatsApp Button