வந்தவாசி அருகே பீர்பாட்டிலால் தாக்கி இளைஞர் மண்டை உடைப்பு - 2 பேர் கைது

வந்தவாசி அருகே பாதிரி கிராமத்தை சேர்ந்த புருஷோத்தமன் (வயது 25), கார் டிரைவராக பணிபுரிந்து வருகிறார். இவர் நேற்று மாலை பாதிரி ஏரிக்கரை அருகில் உள்ள நெற்களத்தில் நண்பர்களுடன் பேசிக் கொண்டிருந்தாராம். அங்கு அதே ஊரைச் சேர்ந்த சுதர்சன்பாலாஜி (20), சிவபாசுவநாதன் (21) ஆகிய இருவரும் மது குடித்துக் கொண்டு சத்தமாக பேசியதாகவும், அப்போது புருஷோத்தமனிடம் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இதில், சுதர்சன்பாலாஜி, சிவபாசுவநாதன் இருவரும் சேர்ந்து, கையில் வைத்திருந்த பீர்பாட்டிலை கொண்டு புருஷோத்தமன் தலையில் அடித்தததாக தெரிகிறது. இதில் அவரது மண்டை உடைந்தது. அவர் உடனடியாக சிகிச்சைக்காக வந்தவாசி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

இதுகுறித்து வந்தவாசி வடக்கு போலீஸ் வழக்குப்பதிவு செய்து சுதர்சன்பாலாஜி, சிவாபாசுவநாதன் ஆகிய இருவரையும் கைது செய்தனர்.



புதியது பழையவை

About Me

WhatsApp Button