வந்தவாசி வட்டத்தை இரண்டாக பிரித்து, பெரணமல்லூர் வட்டம் உருவாக்க வேண்டும்; வெண்குன்றம் மலையைச் சுற்றி கிரிவல பாதை அமைக்க வேண்டும்: வந்தவாசி எம்.எல்.ஏ. கோரிக்கை

சட்டப் பேரவையில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை மானி-யக் கோரிக்கையில் (21 ஏப்ரல் 2025 அன்று) வந்தவாசி தொகுதி உறுப்பினர் எஸ்.அம்பேத்குமார் பேசுகையில், பெரணமல்லூரை தலைமையிடமாகக் கொண்டு புதிய வட்டம் உருவாக்கிட வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். 


சட்டப் பேரவையில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை மானியத்தில் வந்தவாசி எஸ்.அம்பேத்குமார் பேசியதாவது: 

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை மானியக் கோரிக்கையில் பேச வாய்ப்பளித்த முதலமைச்சர் அவர்களுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். 

பொதுவுடமை என்றால் காரல்மார்க்ஸ்! தேசியம் என்றால் மகாத்மா காந்தி! திராவிடம் என்றால் தந்தை பெரியார்! நம் திராவிட மாடல் ஆட்சியின் ஆணிவேர், சென்னை மாகாணம் என்ற பெயரை தமிழ்நாடு என்று மாற்றிய, தமிழ்நாட்டில் என்றும் இருமொழிக் கொள்கைதான் என்று மாநில சுயாட்சி என்ற தத்துவத்தை அறிமுகப்படுத்தி, நமக்கெல்லாம் கொள்கை என்பது வேட்டி போன்றது; பதவி என்பது துண்டு போன்றது என்ற கொள்கை விளக்கமளித்த பேரறிஞர் அண்ணா அவர்களை வணங்குகிறேன். (மேசையைத் தட்டும் ஒலி) 

எத்தனையோ தமிழ் இலக்கியங்கள் இருந்தாலும், அண்ணாவழி வந்த முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களுக்கு மிகவும் பிடித்த சிலப்பதிகாரம் கூறும், “அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாவதும்” என்ற கருத்திற்-கேற்ப, பாண்டியன் நெடுஞ்செழியனைப்போல் ஆட்சி செய்யாமல், பூம்புகார் கண்ட மனுநீதி சோழனைப்போல நியாயமான, நிறைவான ஆட்சி-கண்ட முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களைப் போற்றி வணங்குகிறேன். (மேசையைத் தட்டும் ஒலி) 

போராட்டக் களத்தில் எப்போதும் சிரம் தரவும் தயாராக நிற்கும் சிப்பாய்! உடன்பிறப்புகளின் தர்பாரில் தன்னிகரில்லாத தளபதி! கோடிக்கணக்கான இதயங்களையே மகுடமாக்கிக் கொண்ட மகத்தான தலைவர்! இந்தியாவின் ஆகச்சிறந்த முதல்வர்! உலகத் தமிழினப் பிள்ளைகளுக்காக அயராது உழைக்கும் அன்பின் அப்பாவுக்கு முதல் வணக்கம்! பூமியெங்கும் புன்னகைக்கும் புதையல் நீங்கள்! உங்கள் வழி திசையெட்டும் நடக்கும்! தமிழருக்கு ஒவ்வாத அனைத்தையும் நசுக்குகின்ற பெருவிரல்தான் நீங்கள்! உங்கள் அடிபணிந்து போராட உடனிருப்போம் என்று சூளுரைத்து, எங்கள் அண்ணன் திராவிட நாயகர், முதலமைச்சர் அவர்களை வணங்கி, மகிழ்கிறேன். 

எங்கள் தலைவரே இப்படி என்றால்? இளந்தலைவர் எப்படி இருப்பாரு? சேப்பாக்கத்திலிருந்து அவர் அடிக்கிறதெல்லாம் சிக்ஸர்தான்; அதில் எத்-தனை பேர் அடிபடுவீர்கள்? அவர் காமராஜர் அரங்கத்தில் ஒரு கருத்தைச் சொன்னால், அது பாராளுமன்றம் வரைக்கும் அலறுது; சட்டசபையில் பேசினாலே சகுனிகளுக்கும், அர்ஜூனன்களு க்கும் காய்ச்சல் வருது! பெரியாரின் துணிவும்! அண்ணாவின் அறிவும்! கலைஞரின் உழைப்பும்! தலைவரின் தொலைநோக்கும் ஒருங்கிணைந்த இளந்தலைவர்! ஒவ்-வொரு இரவுக்கும் விடியலிருக்கிறது! ஒவ்வொரு இருளுக்கும் உதயமிருக்கிறது! இன்னும் நூறாண்டுகளுக்கு இந்த மண்ணை பாசிஸ்டுகளிடம் இருந்தும், பிரிவினை வாதிகளிடம் இருந்தும், சுரண்டல் பெருச்சாளிகளிடம் இருந்தும் காக்க தலைவரின் நிழலாய்! தலைமுறைகளின் நம்பிக்கையாய்! சேப்பாக்கத்தின் செல்லப்பிள்ளை, ஆதிக்க நெறியோருக்கும், அதிகார வெறியோருக்கும் அச்சுறுத்தலாய்! ஏழைகளின் இதயத்துடிப்பை உணர்ந்தவராய்! அனுபவத்தின் முதிர்வாய்! அறிவாற்றலின் செறிவாய் செயல்படும் அன்பு அண்ணன், நம் துணை முதல்வர் அவர்களையும் வணங்குகிறேன். 

பேரவைக்குப் பெருமைச் சேர்க்கும் பேரவைத் தலைவர் அவர்களுக்கும், பேரவைத் துணைத் தலைவர் அவர்களுக்கும், மாண்புமிகு அவை முன்ன-வரும், நீர்வளத்துறை அமைச்சர் அவர்களுக்கும் மற்றும் ‘எதிலும் வல்ல-வர்’” என்று முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களாலும், ‘எதிலும் வல்லவர், எழுத்திலும் வல்லவர்’ என்று திராவிட நாயகர், முதலமைச்சர் அவர்களா-லும் பாராட்டப்பட்ட எங்கள் மண்ணின் மைந்தர் அய்யா பொதுப் பணித் துறை அமைச்சர் அவர்களுக்கும் எனது வணக்கத்தைத் தெரிவித்துக்கொள்கிறேன். 

மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சு அவர்களை, நாங்க ‘சென்னையின் கூகுள்’ என்றுதான் கூப்பிடுவோம். அந்தளவுக்கு இங்கே சந்துப் -பொந்துகளுக்கெல்லாம் சென்று மக்கள் பணியாற்றுகிறவர். இன்றைக்கு ‘தமிழ்நாட்டின் கூகுள்’ என்று சொல்ல வைக்கிற அளவிற்கு இந்தத் துறை-யில் சிறப்பாகச் செயல்படுகிறார். அவர் ஒரு மாரத்தான் வீரர்; மக்கள் பணியிலும் அவர் அசரவே அசராத மாரத்தான் வீரர்தான்! அவர்களுக்கும், மாண்புமிகு அரசுக் கொறடா, மாண்புமிகு பேரவை உறுப்பினர்களுக்கும், என்பால் பாசமும், நேசமும், பற்றும், பரிவும்கொண்ட வந்தவாசி தொகுதி மக்களுக்கும், மாவட்டக் கழக, ஒன்றியக் கழக, நகரக் கழக, பேரூர் கழக, வட்ட, கிளைக் கழகச் செயலாளர்களுக்கும், அன்பு உடன்பிறப்புகளுக்கும் எனது வணக்கத்தைத் தெரிவித்துக்கொள்கிறேன். 

தமிழ்நாட்டிற்கு வழிகாட்டியதும், இந்தியாவிற்கே திசை காட்டியதும் நமது கழகமென்றால் அது மிகையல்ல; இந்த வரலாற்று சிறப்புமிக்க தரு-ணத்தில் நம் திராவிட மாடல் நாயகரின் திசைக்காட்டும் திட்டங்களைத் திரும்பிப் பார்ப்பது, நம் அனைவரின் கடமை. மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், மருத்துவ சேவையே மக்களின் சேவை என செயல்படுத்தி வரும் திட்டங்களில், மக்களைத் தேடி மருத்துவம், வருமுன் காப்போம், இன்னுயிர் காப்போம், நடப்போம் நலம் பெறுவோம் (Health Walk), இதயம் காப்போம், சிறுநீரகம் பாதுகாப்பு, சமூக அளவிலான புற்று-நோய் கண்டறியும் பரிசோதனைகள், தொழிலாளர்களைத் தேடி மருத்து-வம், மக்களைத் தேடி ஆய்வகம், பாதம் பாதுகாப்போம், கருத்தரிப்பு மையம் ஆகிய மகத்தான திட்டங்களை தமிழ்நாட்டில் செயல்படுத்தி. உலகமே உற்று நோக்கும்படி செய்துள்ளார்கள். 

மக்களைத் தேடி மருத்துவத் திட்டம். தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், 5-.8-.2021 அன்று. கிருஷ்ணகிரி மாவட்டம், சாமணப்பள்ளியில் “மக்களைத் தேடி மருத்துவம்” திட்டத்தைத் தொடங்கி வைத்தார்கள். இத்திட்டத்தின்-மூலம் 2 கோடி மக்கள் பயன்பெற்றுள்ளனர். இத்திட்டத்தை, தமிழ்நாடு அரசு சிறப்புற செயல்படுத்தியதற்கு, அமெரிக்கா, நியூயார்க் தலைநகரில் நடைபெற்ற 79-வது ஐக்கிய நாடுகள் சபையின்போது. ஐக்கிய நாடுகள் அமைப்பு (United Nation Interagency Task Force Award 2024) சர்வதேச விருது வழங்கப்பட்டுள்ளது. 

முதலமைச்சர் அவர்களின். “காலை உணவுத் திட்டம்” இன்று உலக நாடு-கள் பலவற்றில் செயல்படுத்தப்படுவதைப் போல, இத்திட்டம் உலக நாடு-கள் பின்பற்றக்கூடிய திட்டமாக மாறி, தமிழ்நாடு அரசின் திட்டம் என்ப-தற்குப் பதிலாக “ஸ்டாலின் திட்டம்” என்று உலக நாடுகளில் பெயர் பெற்று வருகிறது. (மேசையைத் தட்டும் ஒலி) 

கலைஞரின் வருமுன் காப்போம் திட்டம். சேலம் மாவட்டம், வாழப்பாடி-யில் “கலைஞரின் வருமுன் காப்போம்” என்ற திட்டத்தை 29-.9.-2021 அன்று, முதலமைச்சர் அவர்கள் தொடங்கி வைத்தார்கள். இத்திட்டத்தின்கீழ் ஆண்டிற்கு 1,250 மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. 17 சிறப்பு மருத்துவர்கள் மூலம் சிறப்பு மருத்துவ சிகிச்சை கள், தொற்று நோய் மற்றும் தொற்றா நோய் பரிசோதனைகள் செய்யப்படுகின்றன. கடந்த நான்கு ஆண்டுகளில், 5,179 முகாம்கள் நடத்தப்பட்டு, 4.82 கோடி மக்கள் பயனடைந்துள்ளனர். 

இதயம் காப்போம். தமிழ்நாடு முழுவதும் இருதய நோயினால் ஏற்படும் உயிரிழப்புகளை தடுக்கும்பொருட்டு, கோயம்புத்தூர் மாவட்டம், மலுமிச்-சம்பட்டி ஊராட்சியில் 27-.6.-2023 அன்று “இதயம் காப்போம்” என்ற திட்டம் தொடங்கி வைக்கப்பட்டது. 2,286 ஆரம்ப சுகாதார நிலையங்களிலும், 8,713 துணை சுகாதார நிலையங்களிலும் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வரு-கின்றன. 

சிறுநீரகம் பாதுகாப்புத் திட்டம். சிறுநீரக செயலிழப்பை ஆரம்ப நிலையி-லேயே கண்டறியும்பொருட்டு, சேலம் மாவட்டம், காடையாம்பட்டியில் 10-.7.-2023 அன்று தொடங்கி வைக்கப்பட்டது. இத்திட்டத்தின்மூலம் 83.47 இலட்சம் நபர்களுக்கு சிறுநீரக பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. 

முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டம். ஏழையெளிய மக்கள் உயர்தர மருத்துவ வசதி பெறும்வகையில், மாண்புமிகு முன்னாள் முதலமைச்சர் முத்தமிழறி ஞர் கலைஞர் அவர்களால், 23-.7.-2009 அன்று முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டம் தொடங்கப்பட்-டது. இத்திட்டத்தின்மூலம், பதிவு செய்துள்ள குடும்பத்தினர், அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் ரூ.5 இலட்சத்திற்குள் மருத்துவச் செலவுக-ளைப் பெறலாம். இத்திட்டத்தின்மூலம், 2,053 மருத்துவம் மற்றும் அறுவை சிகிச்சைகளும், 8 சிறப்பு உயர் சிகிச்சைகளும், 52 முழுமையான பரிசோ-தனைகளும், 11 தொடர் சிகிச்சைகளும் பெறலாம். இத்திட்டத்தில் கடந்த நான்கு ஆண்டுகளில் மட்டும், 17.79 இலட்சம் புதிய பயனாளிகள் சேர்க்கப்-பட்டுள்ளனர். கோவிட் தொற்றினால், பெற்றோரை இழந்து ஆதரவின்றி தவிக்கும் குழந்தைகளுக்கு “சிறப்பு அங்கீகார அட்டை” 1,315 நபர்க-ளுக்குவழங்கப்பட்டுள்ளது. 

முதல்வர் மருந்தகங்கள். மக்களின் சுகாதாரச் செலவுகளை குறைக்கும் வகையில், 1,000 “முதல்வர் மருந்தகங்கள்” 24-.2.-2025 அன்று மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் தொடங்கி வைக்கப்பட்டது. இந்த மருந்தகங்களில் குறைந்த விலையில் மருந்துகள் விற்பனை செய்யப்படு-கின்றன. சுகாதாரத்திற்கு முன்னுரிமை அளிப்பதற்கான முயற்சிகளில் இதுவும் ஒன்றாகும். 

கடந்த கால ஆட்சியில் அம்மா கிளினிக் என்ற மருத்துவமனைகள் துவங்-கப்பட்டன. அதில், மருத்துவர்களும் இல்லை. செவிலியர்களும் இல்லை, மருந்துகளும் இல்லை. 

“இன்னுயிர் காப்போம், நம்மை காக்கும் 48”. சுகாதார சேவைகளை மக்க-ளின் வீடுகளுக்கே கொண்டு செல்வதை, தமிழ்நாடு முதலமைச்சர் அவர்-கள் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார். இதன் ஒரு பகுதியாக, “இன்னுயிர் காப்போம், நம்மை காக்கும் 48” உள்ளிட்ட பல்வேறு திட்டங்க-ளால் சுகாதாரத் துறை அடுத்த கட்டத்துக்குச் சென்று கொண்டுள்ளது. மாநில அரசின் செயல்திறனுள்ள நடவடிக்கைகளால், உறுப்பு தானம் செய்பவர்களின் எண்ணிக்கை 42% அதிகரித்துள்ளது. 

தீவிர சிகிச்சைப் பிரிவு (Critical Care Unit-ICU). தமிழ்நாட்டில் எல்லா மருத்துவமனைகளிலும் தீவிர சிகிச்சைப் பிரிவு . 

தீவிர சிகிச்சைப் பிரிவு (critical care ICU) தமிழ்நாட்டில் எல்லா மருத்துவம-னைகளிலும், தீவிர சிகிச்சைப் பிரிவு முதலமைச்சர் அவர்களால் செயல்-பாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இந்தப் பிரிவு அனைத்து வசதிக-ளும் கொண்டது. ஏழ்மை நிலையில் உள்ளவர்களுக்கு இத்தகைய வசதி கிடைத்துள் ளது என்பது மிகப்பெரிய வரப்பிரசாதமாகும். 

மகப்பேறு மரணம் (Maternal Death) இந்தியாவில் கர்ப்பம் மற்றும் பிரசவம் காரணமாக ஏற்படும் இறப்புகளின் எண்ணிக்கை பல ஆண்டுகளாக மிக அதிகமாக இருந்தது. ஒரு இலட்சம் தாய்மார்கள் கர்ப்பம் அடைந்தால், அவர்களில் இறப்பு எண்ணிகை 90 ஆக இருந்தது. இதனை 43 ஆக குறைக்க வேண்டுமென்று இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டது. ஆனால், தமிழ்நாட்டில் இலக்கிற்குக் கீழே 39 ஆக தற்போது இருக்கிறது என்பது தமிழ்நாட்டின் மருத்துவமனையின் சாதனையாகும். 

கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை, நமது உடலில் இரண்டாவது பெரிய உறுப்பான கல்லீரல் பாதிக்கப்படும்போது, பலவித நோய்கள் ஏற்பட்டு, உடல்நிலை மோசமாகும் நிலை ஏற்படும். கல்லீரல் மாற்று அறுவைச் சிகிச்சை செய்ய ரூ.30 இலட்சம் முதல் ரூ.70 இலட்சம் வரை தனியார் மருத்துவமனைகளில் செலவு செய்ய நேரிடும். ஏழைகளின் நிலையை உணர்ந்த முதலமைச்சர் அவர்கள், கல்லீரல் மாற்று அறுவை சிகிச்-சையை அரசு மருத்துவமனைகளில் செய்ய வழிவகை செய்தார். இது-வரை, இராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் 15 நபர்களுக்கும், ஸ்டான்லி மருத்துவமனையில் 101 நபர்களுக்கும் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. 

எலும்பு மஜ்ஜை மற்றும் மாற்று சிகிச்சை ஏழை எளியவர்களுக்குக் கிடைக்காத இந்த எலும்பு மஜ்ஜை மாற்று சிகிச்சை தற்போது, இராஜீவ் காந்தி, 

குழந்தைகள் உட்பட 143 அறுவை சிகிச்சைகள் செய்யப்பட்டு, ஏழைகள் பயன்பெற்றுள்ளார்கள். இத்தகைய சிகிச்சைக்கு தனியார் மருத்துவம-னைகளில் ரூ.30 இலட்சம் முதல் ரூ.50 இலட்சம் வரை செலவாகும். 

சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை, சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை என்பது சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்ட ஒரு நோயாளிக்கு சிறுநீர-கத்தை உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்வதாகும். இந்த சிகிச்சை தனியார் மருத்துவமனைகளில் மட்டுமே செய்யப்பட்டு வந்தது. இதற்காக ரூ.30 இலட்சம் முதல் ரூ.50 இலட்சம் வரை தனியார் மருத்துவமனைகளில் செலவாகும். ஏழைகளுக்கு எட்டாக் கனியாக இருந்த இந்த சிகிச்சை தற்-போது, அரசு மருத்துவமனைகளிலும் இச்சிகிச்சை செய்யப்படுகிறது. இதுவரை ஸ்டான்லி, கீழ்ப்பாக்கம் மருத்துவமனைகளில், 1,600-க்கும் மேற்-பட்ட சிகிச்சைகள் செய்யப்பட்டு, ஏழை மக்கள் பயனடைந்துள்ளனர். 

தேசிய முதியோர் மருத்துவமனை, கிண்டி (National Old age Hospital) முதியோ ர்களுக்கு பிரத்யேகமாக சிகிச்சை அளிக்க வேண்டும் என்பதற்காக முதலமைச்சர் அவர்கள், தேசிய முதியோர் மருத்துவமனையை சென்னை கிண்டியில் அமைத்துள்ளார். இத்தகைய மருத்துவமனை இந்-தியாவிலேயே இரண்டு மட்டுமே உள்ளது என்பது குறிப்பிடத் தக்கது. 

பள்ளிகளில் செவிலியர் நியமனம், மேலை நாடுகளில் மருத்துவத் துறை-யும், கல்வித் துறையும் இணைந்து பள்ளிக்கூடங்களில் ஒரு செவிலியர் வீதம் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். அந்த செவிலியர்கள் பள்ளி மாண-வர்களுக்கு தேவையான மருத்துவ உதவிகளை செய்து வருகின்றனர். அதேபோல, தமிழ்நாட்டில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் ஒரு செவிலியர் நியமனம் செய்ய முன்வர வேண்டும். இதனால் பள்ளிக் கூடங்களில் விடு-முறை எடுக்கும் மாணவர்களின் எண்ணிக்கை வெகுவாக குறைய வாய்ப்புள் ளது. இத்திட்டம் இந்தியாவிற்கே ஒரு முன்னோடித் திட்டமாக அமையும். 

இதுவரை தமிழ்நாடு அரசு 811 விருதுகள் பெற்றுள்ளது. திராவிட மாடல் அரசு பொறுப்பற்ற பிறகு 742 விருதுகள் பெற்றுள்ளன. ‘நாடென்ப நாடா வளத்தன’ என்ற திருக்குறளுக்கு ஏற்ப நம் இணை எதிரிகள் “Stalin is more dangerous than Karunanidhi” என்று புலம்புகின்றனர். கிண்டியில் கலைஞர் நூற்றாண்டு பன்னோக்கு சிறப்பு மருத்துவமனை, எய்ம்ஸ் hospital-ஐ விட உயர்தரமான வசதிகளுடன் நாங்கள் கட்டி முடித்துவிட்டோம். சொல் அல்ல அது செயல். இதுதான் திராவிட மாடல் ஆட்சி. எத்தனையோ எத்த-னையோ திட்டங்கள் குழந்தைகளின் எதிர்காலத்திற்காக ஊட்டச்சத்து உறுதிசெய் திட்டம். . . 

இந்தியாவில் கர்ப்பப்பை cancer-ஆல் எட்டு நிமிடத்திற்கு ஒரு பெண் உயிரி-ழக்கிறார் என்று சொல்கிறார்கள். அந்த நோய்க்கான இலவச தடுப்பூசி வழங்கும் திட்டம், இன்னுயிர் காப்போம் விபத்தில் சிக்குபவர்களுக்கு 48 மணி நேர இலவச சிகிச்சையோடு ஐந்து அம்சத் திட்டம், திட்டம் தீட்டுவது மட்டுமல்ல, செயல்படுத்துவது மட்டுமல்ல, அது கடைசிப் பயனாளிகள் வரைக்கும் போய் சேர்கிறதா என்று கண்காணிக்கும் பொறுப்பை மிகத் தீவிரமாக செய்கிறது மக்கள் நல்வாழ்வுத் துறை. 

இந்தத் திட்டங்களால் பல இலட்சம் பயனாளிகள் பயனடைந்திருக்கிறார்-கள்; பயனடைந்து வருகிறார்கள். யாரோ சில கோமாளிகள் இது மன்ன-ராட்சி என்று சொல்கிறார்கள். தி.மு.க. அளவிற்கு ஜனநாயகபூர்வமான இயக்கம் உலகத்திலேயே கிடையாது. தன்னுடைய தத்துவத்தால், தியாகத்தால், அன்பால், செயல்களால், ஒவ்வொரு வீட்டிற்குள்ளே யும், மக்களின் இதயத்திற்குள்ளேயும் சென்று மக்களின் நம்பிக்கையைப் பெற்ற ஜனநாயக இயக்கம். அந்த மக்களின் நம்பிக்கைதான் எங்களை ஆட்சிக் கட்டிலில் வைத்திருக்கிறது; வைக்கவும் உள்ளது. சரி நீ சொல்கிற மாதிரியே இருக்கட்டும்! ஆமாம், மன்னராட்சிதான். கோடான கோடி மக்களின் இதயங்களில் முடிசூடா மன்னராக திகழும் எங்கள் முதலமைச்சர் அவர்கள் (மேசையைத் தட்டும் ஒலி) ஆட்சி மன்னராட்சிதான். 

நம்பிக்கையிலும் நடைபெறுகின்ற இந்த மன்னராட்சியை எவராலும் வீழ்த்த முடியாது. ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ என்ற கணியன் பூங்குன்றனார் வாக்குப்போல ‘எல்லார்க்கும் எல்லாம்’ என்ற உயர்ந்த தத்துவத்தை உலகத்திற்கே உணர்த்துகின்ற மாபெரும் இயக்கமான திராவிட முன்னேற்றக் கழக குடும்பத்தின் தலைவரும், முதலமைச்சருமான எங்கள் தளபதி அவர்களை வணங்கி என் உரையை நிறைவு செய்கிறேன். 



வந்தவாசியில் பாலிடெக்னிக் கல்லூரி

எங்களுடைய வந்தவாசி சட்டமன்றத் தொகுதியின் கோரிக்கைகள். 17-.2.-2021 அன்று ‘உங்கள் தொகுதியில் ஸ்டாலின்’ என்ற நிகழ்ச்சியில் எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது, கழக ஆட்சி பொறுப் பேற்றவுடன் அரசு பாலிடெக்னிக் கல்லூரி வந்தவாசியில் அமைக்கப்படும் என்று மகிழ்ச்சிகரமான அறிவிப்பினைத் தந்தார்கள். அந்த அறிவிப்பினை நிறை வேற்றி தரும்படி கேட்டுக்கொள்கிறேன். 

வந்தவாசி வட்டத்தை பிரிக்க வேண்டும்

திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி வட்டம், 148 வருவாய் கிராமங்-களையும், 2 பேரூராட்சிகளையும், 1 நகராட்சியையும் உள்ளடக்கிய ஒரு வட்டம். எனவே, அந்த மிகப்பெரிய வட்டத்தைப் பிரித்து பெரணமல்லூர் பேரூராட்சியை தலைமையிடமாகக் கொண்டு ஒரு புதிய வட்டம் உருவாக்கிட வேண்டும். 

வந்தவாசி நகராட்சியில் மொத்தம் 24 வார்டு-கள் உள்ளன. அந்த 24 வார்டு-களிலும் தினசரி தண்ணீர் பற்றாக்குறை உள்ளது. ஆகவே, அங்கு 15 இலட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட நீர்த்தேக்கத் தொட்டியை அமைத்து, 24 வார்டு-களிலும் சராசரியாக தினசரி குடிநீர் வழங்கும்படி கேட்டுக்கொள்கிறேன். அதுமட்டுமல்ல, பெரணமல்லூருக்கு ஓர் ஒழுங்குமுறை விற்பனைக்கூடம் அமைத்துத்தர வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன். 

தொகுதிக் கோரிக்கைகள்: 

  • வந்தவாசி அரசுப் பொது மருத்துவமனையில் CT ஸ்கேன் மற்றும் MRI ஸ்கேன் போன்ற வசதிகள் ஏற்படுத்தி, போதுமான மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் பணியிடங்கள் உருவாக்கித் தர வேண்டும். 
  • வந்தவாசி நகராட்சிக்குப் போக்குவரத்து காவல் நிலையம் அமைத்துத் தர வேண்டும். 
  • பெரணமல்லூர் பேரூராட்சியை தனி தாலுகாவாக அறிவிக்க வேண்டும். பேருந்து நிலையத்தை மேம்படுத்தி தர வேண்டும். 
  • பெரணமல்லூர் பேரூராட்சியில், செங்கம்பூண்டி கூட்டு சாலையில் இடம் தேர்வு செய்து, இன்னும் பணிகள் தொடங்கப்படாமல் உள்ள இடத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் அமைத்துத் தர வேண்டும். நெடுஞ்சாலைத் துறை அலுவலகம் அமைத்துத் தர வேண்டும். 
  • பெரணமல்லூரில் மகளிர்காவல் நிலையம் அமைத்துத் தர வேண்டும். புறவழிச்சாலை அமைத்துத் தர வேண்டும். 
  • சேத்துப்பட்டு-பெரணமல்லூர் வரை, நகரப் பேருந்து இயக்க வேண்டும். பெரணமல்லூர் பேரூராட்சி, மடத்தில் கால்நடை மருத்துவமனை ஏற்படுத்தித் தர வேண்டும். 
  • வந்தவாசி நகரம், 1-வது, 2-வது, 3-வது ஆகிய வார்டுகள் அடங்கிய இடுகாட்டிற்கு செல்வதற்கு சாலை அமைத்துத் தர வேண்டும். 
  • வந்தவாசி நகரம், 20-வது, 21-வது மற்றும் 22-வது வார்டு, புதிய பேருந்து நிலையம் செல்வதற்கு பாலம் கட்டித்தர வேண்டும். 
  • வந்தவாசியில் புதிய போக்குவரத்து காவல் நிலையம் அமைத்துத் தர வேண்டும். 
  • வந்தவாசியில், வட்டாட்சியர், துணை வட்டாட்சியர் மற்றும் நீதிபதி தங்குவதற்கு புதிய கட்டடம் கட்டித் தர வேண்டும். 
  • வந்தவாசியில் புதிய நூலகக் கட்டடம் கட்டித்தர வேண்டும். 
  • வெண்குன்றம் மலையை சுற்றிவர கிரிவலப்பாதை அமைத்துத் தர வேண்டும். 
  • ஆரியாத்தூர் கிராமத்திற்கு கால்நடை மருத்துவமனை ஏற்படுத்தித்தர வேண்டும். 
  • கடைசிகுளத்திற்கு ஒரு சிறு நடைபாலம் அமைத்துத் தர வேண்டும். 
  • மருதநாடு ஏரியை ஆழப்படுத்தி கரையை மேம்பாடு செய்து தர வேண்டும். 
  • கீழ்நர்மா மற்றும் இரும்பேடு ஆகிய கிராமங்களில் சமுதாயக்கூடம் கட்டித்தர வேண்டும். 
  • சளுக்கை ஏரியை ஆழப்படுத்தித் தர வேண்டும். 
  • காரம் கிராமத்தில் அமைந்துள்ள காரீஸ்வரர் கோயில் அருகில் சமுதாயக்கூடம் அமைத்துத் தர வேண்டும். 
  • விளாங்காடு ஏரியை ஆழப்படுத்தி கரையை மேம்பாடு செய்து தர வேண்-டும். 
  • கொவளை கிராமத்தில் உள்ள குளத்தை தூர்வாரி, நடைபாதை அமைத்-துத் தர வேண்டும். 
  • கீழ்க்கொடுங்காலூர் ஊராட்சியில் அரசு ஆரம்ப சுகார நிலையத்தை தர-முயர்த்தி தர வேண்டும். சமுதாயக் கூடத்தை புதுப்பித்து அடுக்குமாடி கட்டித்தர வேண்டும். அரசு மகளிர் பள்ளியை மேல்நிலைப் பள்ளியாக தரமுயர்த்தித் தர வேண்டும். 
  • கீழ்க்கொடுங்காலூர் ஊராட்சியை பேரூராட்சியாக தரமுயர்த்தித் தர வேண்டும். கீழ்க்கொடுங்காலூருக்கு புதிய ஊராட்சி மன்ற கட்டடம் கட்டித்தர வேண்டும். 
  • தெள்ளார் வீரனாமூர் வரையுள்ள ஒருவழிச் சாலையை இருவழிச்சாலை-யாக அகலப்படுத்தி தர வேண்டும். தெள்ளார் வெடால் வரையுள்ள சாலையை இருவழிச்சாலையாக அகலப்படுத்தி தர வேண்டும். 
  • தெகர்வடக்குப்பட்டு வரையுள்ள சாலையை இருவழிச்சாலையாக அகலப்படுத்தி தர வேண்டும். 
  • தெள்ளார் ஒன்றியத்தில் இயங்கி வரும் தீயணைப்பு நிலையத்திற்கு நிரந்தரக் கட்டடம் கட்டித்தர வேண்டும். 
  • தெள்ளாரில் ஒழுங்குமுறை விற்பனைக்கூடம் ஏற்படுத்திதர வேண்டும். தெள்ளார் ஒன்றியத்தில் வார சந்தையை மறுபடியும் இயக்கிட வேண்டும். 
  • கலசப்பாக்கம் மற்றும் செய்யாறு ஆற்றுப்படுகையிலிருந்து கலசப்பாக்கம், துரிஞ்சபுரம், போளூர், சேத்துப்பட்டு, பெரணமல்லூர், தெள்ளார், வந்தவாசி ஆகிய ஊராட்சி ஒன்றியங்கள் வழியாக, மதுராந்தகம் ஏரியில் கலக்க கால்வாய் அமைக்க வேண்டும். 
  • தெள்ளாரில் இராஜ நந்திவர்மன் மன்னரால் கட்டப்பட்ட திருமூலட்டானேஸ்வரர் ஆலயம், ஸ்ரீ ஆதிநாராயணப் பெருமாள் ஆலயம் மற்றும் அருள்மிகு சக்தி முத்தாலம்மன் ஆலயம் போன்ற ஆலயங்களுக்கு இந்து சமய அறநிலையத் துறையின் மூலம் தங்கும் விடுதி அமைத்துத் தர வேண்டும். 
  • கோதண்டபுரம் அருள்மிகு கோதண்டராமர் ஆலயத்திற்கு கோவில் தளவாடப் பொருட்கள் வைக்க வும், சுபநிகழ்ச்கிள் நடத்தவும் கட்டடம் கட்ட நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும். 
  • தெள்ளார் மற்றும் பெரணமல்லூர் ஆகிய ஊராட்சி ஒன்றியங்களை பிரித்து மழையூர் ஊராட்சி ஒன்றியம் உருவாக்கிட வேண்டும். 
  • கோதண்டபுரம் இடுகாட்டிற்கு செல்ல சாலை அமைத்துத் தர வேண்டும். 
  • தக்கண்டராயபுரம், கீழ்நந்தியம்பாடி கிராமத்திற்கு புதிய மேல்நீர்த் தேக்கத்தொட்டி அமைத்துத் தர வேண்டும். 
  • தென்கரை ஊராட்சி கொரசலவாடி முதல் வல்லம் வரை உள்ள ஜல்லி சாலையை தார்ச்சாலையாக மாற்றித் தர வேண்டும். 
  • தென்னாத்தூர் ஊராட்சியில் நேரடி நெல்கொள்முதல் நிலையத்திற்கு நிரந்தரக் கட்டடம் கட்டித்தர வேண்டும். 

இவ்வாறு அம்பேத்குமார் பேசினார்.


புதியது பழையவை