வந்தை வட்ட கோட்டை தமிழ்ச் சங்கம் சார்பில் உலக மகளிர் தின விழா

 வந்தை வட்ட கோட்டை தமிழ்ச் சங்கம் சார்பில் உலக மகளிர் தின விழா



வந்தை வட்ட கோட்டை தமிழ்ச் சங்கம் சார்பில் உலக மகளிர் தின விழா சன்னதி தெருவில் உள்ள ஆசியன் இன்ஸ்டிடியூட் வளாகத்தில் 08-03-2025 அன்று நடைபெற்றது. இந்த நிகழ்விற்கு சங்க தலைவர் பீ.ரகமத்துல்லா தலைமை தாங்கினார். துணைத் தலைவர்கள் பா.சீனிவாசன், முகமது அப்துல்லா, எ.தேவா, துணை செயலாளர் க.வாசு ஆகியோர் முன்னிலை வகித்தனர். துணைத் தலைவர் இரா.நளினா வரவேற்றார்.
சிறப்பு அழைப்பாளராக, ஆரணி பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ். தரணி வேந்தன் பங்கேற்று, பெண்மையை போற்றுவோம் என்ற தலைப்பில் சிறப்புரை ஆற்றினார். மேலும் நகராட்சி ஆணையர் ரா.சோனியா, அரசினர் பெண்கள் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியை பொ.பத்மாவதி, அனைத்து மகளிர் காவல் நிலைய சப் இன்ஸ்பெக்டர் தி.சாந்தி, ஆசியன் இன்சிடியூட் தாளாளர் ஆசியா பர்வீன் ஆகியோருக்கு சாதனை மங்கை விருதுகள் வழங்கப்பட்டது. மேலும் இந்த நிகழ்ச்சியில் நகர செயலாளர் தயாளன், மருதாடு சந்திரன், சங்க துணைத் தலைவர் வந்தை பிரேம், துணைச் செயலாளர்கள், ஜா.தமீம், பூ.சண்முகம், உறுப்பினர்கள் ஸ்ரீமந்த், அப்துல் ரஹ்மான், அ.ஷாகுல் அமீது கு.சதானந்தன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். தென்னாங்கூர் ரஜினி தமிழிசை பாடல்களை பாடினார். நிகழ்வை சங்க செயலாளர் இரா.பாஸ்கரன் தொகுத்து வழங்கினார். சங்க பொருளாளர் சீ.கேசவ ராஜ் நன்றி கூறினார்.
புதியது பழையவை