கிராம பஞ்சாயத்துகளை டிஜிட்டல் மயமாக்கும் திட்டம் தமிழ்நாடு முழுவதும் நடைமுறைப்படுத்துவது எப்போது? ஆரணி திமுக எம்.பி. தரணிவேந்தன் கேள்வி

கிராம பஞ்சாயத்துகளை டிஜிட்டல் மயக்காக்கும் எம்.எம்.பி திட்டத்தின்கீழ் பயன்பெறும் பஞ்சாயத்துகள் குறித்து ஆரணி தொகுதி திமுக மக்களவை உறுப்பினர் தரணிவேந்தன் நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பியுள்ளார்.

இத்திட்டத்தின்கீழ் ஒதுக்கீடு செய்யப்பட்ட மொத்த நிதி எவ்வளவு? டிஜிட்டல் மயமாக்கல், உள்கட்டமைப்பு மேம்பாடு மற்றும் பஞ்சாயத்து ஊழியர்களின் பயிற்சிக்காக ஒதுக்கப்பட்டு பயன்படுத்தப்படும் மொத்த நிதியின் அளவு எவ்வளவு?

பஞ்சாயத்து அளவிலான சான்றிதழ்கள் பெறுவது, ஒப்புதல்கள் பெறுவது மற்றும் பிற ஆன்லைன் சேவைகளை திறம்பட செயல்படுத்துவதை உறுதி செய்ய எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன? மற்றும் டிஜிட்டல் முறையில் தரவு பாதுகாப்பு மற்றும் தனியுரிமையை உறுதி செய்ய எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன? என்றும் அவர் கேட்டுள்ளார்.





புதியது பழையவை